சுந்தரவல்லிக்கு தெரிந்த உண்மை, விஜி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அர்ச்சனா நந்தினிக்கு பாலில் மாத்திரையை கலந்து கொடுக்க நந்தினி அதைக் குடித்து விடுகிறார். உடனே நந்தினி எனக்கு தூக்கம் தூக்கமா வருதுமா நான் இங்க படுத்துக்கவா என்று சொல்ல இது நம்ம ரூம் நந்தினி படுத்துக்கோ என்று சொல்லி பெட்டில் படுக்க வைக்கிறார். நந்தினி தூங்கிக் கொண்டிருக்க பக்கத்தில் உட்கார்ந்து ஊருக்கு எப்ப போன தங்கச்சிங்கள பார்த்தியா என்று கேட்டதற்கு தலையை அசைத்த நந்தினி தங்கச்சிங்களுக்கு கல்யாணம் எப்போ என்று பேசும்போது நந்தினி அசந்து தூங்கி விடுகிறார். இதனைத் தெரிந்து கொண்ட அர்ச்சனா நேராக சூர்யாவின் ரூமுக்கு வருகிறார். சூர்யா தூங்கிக் கொண்டிருக்க பக்கத்தில் வந்து உட்காருகிறார்.
நீயும் நானும் ஒரே ரூம்ல ஒரு ராத்திரி ஒன்னா இருப்போம்னு நீ நினைக்கல இல்ல, நானே நினைக்கல இது எல்லாமே கனவு மாதிரி இருக்கு இந்த நாள் இந்த நைட் இப்படியே உறைந்து போயிட்டா நல்லா இருக்கும். நீ ஏண்டா என்ன படுத்தி எடுக்கிற, இந்த அளவுக்கு ஏன் என்னை மயக்கி வச்சிருக்க என்று கேட்டு தலைகோதி விட, இப்ப இந்த இடத்துல நான் இருந்திருக்கணும் ஆனா பரவால்ல நெனச்சபடி கல்யாணம் ஆயிருந்தாலும் உன்ன இவ்வளவு லவ் பண்ணி இருப்பனான்னு தெரியாது உன்ன கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன் என்று சொல்லுகிறார். நீ நல்லா தூங்கு சரியா உன்ன நைட்டு ஃபுல்லா பார்த்து ரசிக்க போறேன் என்று சொல்லி சூர்யாவிற்கு பெட்ஷீட் போட்டு விடுகிறார். மறுபக்கம் விஜியும் விவேக்கும் வாக்கிங் வந்து கொண்டு இருக்க, நண்பனையும் கூப்பிடலாமா என்று கேட்கிறார். ஏன் அவர் சந்தோஷமா இருக்கிறது புடிக்கலையா, கொஞ்ச நேரம் அவங்கள ஃப்ரீயா இருக்க விடுங்க என்று சொல்லியும் கேட்காமல் விவேக் போன் பண்ணுகிறார். சூர்யாவின் போனை எடுத்து அர்ச்சனா கட் பண்ண, விவேக் நந்தினிக்கு போன் போடுகிறார்.
அவங்க தான் போன் எடுக்கலல்ல எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க வாங்க நம்ம நடக்கலாம் என்று அழைத்து சென்று விடுகிறார். கொஞ்ச நேரம் கழித்து தூக்கத்திலிருந்து சூர்யா எழுந்து ரெஸ்ட் ரூம் போக, அர்ச்சனா தூக்கத்தில் பெட்ஷீட் எடுத்து முகத்தை மூடி கொள்கிறார். இதனால் சூர்யாவிற்கு பக்கத்தில் அர்ச்சனா இருப்பது தெரியாமல் இருக்கிறது. உடனே சூர்யா நந்தினி நேத்து நீ என்ன பண்ண தெரியுமா? என்று கேட்க அர்ச்சனா முழித்துக் கொண்டு ஐயோ மாட்டிக்கப் போறேன்னா என்று முழித்துக் கொண்டிருக்கிறார். நைட்டெல்லாம் என்ன தூங்க விடாம அப்படி எட்டி உதைக்கிற நான் போதையில் இருப்பேன்னு மட்டும் நினைக்காத எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு நான் வந்து வச்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் போக அர்ச்சனா ரூமில் இருந்து வேகமாக வெளியில் வர நந்தினி தூக்கத்திலிருந்து முழித்து அர்ச்சனம்மா என கூப்பிடுகிறார்.
அர்ச்சனாவை தேடி விட்டு ரூமில் இருந்து நந்தினி வெளியே வர அர்ச்சனா எதிரில் வந்து எங்க போயிருந்தீங்க என்று கேட்க நீ தூங்கிட்டு இருந்த அதான் வாக்கிங் போயிட்டு இருந்தேன் என்று சொல்ல என்னமோ தெரியலம்மா உடம்பே அடிச்சு போட்ட மாதிரி இருந்தது என்று சொல்ல சரி நீ ரூமுக்கு போ சூர்யா தேட போறான் என்று சொல்ல நந்தினி ரூமுக்கு வருகிறார். பாத்ரூமில் இருந்து வெளியே வந்த சூர்யா நீ நைட் எல்லாம் எதுக்கு அப்படி பண்ண என்று கேட்க நான் என்ன பண்ணேன் என்று கேட்கிறார். நைட்டெல்லாம் எதுக்கு அப்படி உதைக்கிற நீ உதைத்த உதைல போதை எல்லாம் இறங்கி போச்சு என்று சொல்ல, இது மட்டும் இல்லாம நீ என் பக்கத்துல படுக்க மாட்டியே, நான் கீழ படுத்தால் நீ மேல படுப்ப நான் மேல படுத்தா நீ கீழ படுப்ப அப்புறம் எப்படி மேல படுத்த என்று கேட்க, அதுக்கு வாய்ப்பே இல்லை நான் உங்களை உதைச்சனா நீங்க ஏதோ கனவு கண்டு இருக்கீங்க, முதல்ல ராத்திரி ஃபுல்லா நான் இந்த ரூம்ல இல்ல, நான் அர்ச்சனமா ரூம்ல நைட்டு தூங்கிட்டேன் இப்பதான் வரேன் என்று சொல்லுகிறார். பொய் சொல்லாத, குடிச்சுட்டு ஒளராதீங்க நைட் ஃபுல்லா நான் இங்கே இல்லை அப்புறம் எப்படி உங்க பக்கத்துல படுக்க முடியும் என்று சொல்ல சூர்யா குழம்பி போகிறார். சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க இனிமேலாவது கொஞ்சம் கம்மியா குடிங்க என்று சொல்லிவிட்டு நந்தினி வேலையை பார்க்க சூர்யாவிற்கு ஒன்றும் புரியாமல் ரூமில் இருந்து வெளியே வருகிறார்.
அப்போ என் பக்கத்தில் படுத்து இருந்தது யார் என்று தெரியாமல் சூர்யா தனியாக பேசிக்கொண்டு இருக்க இதனை கவனித்த விவேக் மற்றும் சூர்யா என்ன மச்சான் தனியா புலம்பி கிட்டு இருக்கான் என்னாச்சு என்று புரியாமல் இருவரும் வந்து சூர்யாவிடம் விசாரிக்கின்றனர். சூர்யா நந்தினி நேத்து நைட் என் பக்கத்துல தான் பெட்ல படுத்துகிட்டு இருந்தா நைட் எல்லாம் என்ன உதைச்சு தள்ளிட்டா எதுக்கு அப்படி பண்ணனு கேட்டா நான் நேத்து நைட் ரூம்லயே இல்லன்னு சொல்றா, அப்போ எங்க போனா என்று விஜி கேட்க அவ அர்ச்சனா ரூம்ல தங்கியதா சொல்றா அப்போ, என் பக்கத்தில் படுத்து இருந்த ஆள் யாரு என்று கேட்க இருவரும் சிரித்து விட்டு முன்னாடி நாள் நைட்டு எப்படி நந்தினி கொலுசு கைக்கு வந்ததோ அது மாதிரி தான் இதுவும் என சொல்லிவிட்டு சூர்யாவிடம் பாட்டு பாடி கிண்டல் அடித்து பேசிவிட்டு இருவரும் சென்று விடுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் நந்தினியும் ரெசார்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சுந்தரவல்லி பார்த்து விட அவங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் ட்ரிப் அனுப்பி வச்சிருக்கீங்க எதுக்கு இது மாதிரி வேலை பாக்குறீங்க என்று கேட்கிறார்.
விஜியும் நந்தினியும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அர்ச்சனா கண்டிப்பா இவதான் எல்லாத்தையும் ஏத்தி விட்டுருப்பா என்று சொல்லுகிறார். நந்தினி விஜியிடம் நீங்க யார் மேலயோ இவ்ளோ கோவமா பேசி பார்த்ததில்லையே அக்கா என்று கேட்க, தெரியுதுல முதல அவகிட்ட பேசுறது நிறுத்து என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
