நந்தினி சொன்ன வார்த்தை, அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 04-06-25
Moondru Mudichu Serial Today Promo Update 04-06-25

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி இன்னைக்கு நைட்டு நான் நிம்மதியா தூங்குவேன் என சொல்லிவிட்டு சந்தோஷமாக செல்கிறார். மறுபக்கம் நந்தினி இதெல்லாம் கனவா நினைவா என்று தெரியல, நான் என் குடும்பத்தோட நிம்மதியா இருக்க போறேன். விஜி அக்கா சொன்னது உங்களை இவ்வளவு பாதித்து விட்டதா இது தெரிஞ்சிருந்தா நான் முன்னாடியே சொல்லி இருப்பேன் என்று என்று நினைத்து விட்டு இதை யார்கிட்டயாவது சொல்லனுமே என்று நினைக்க வேண்டாம் முதல்ல காலைல எழுந்து கிளம்பிட்டு அப்புறம் சொல்லிக்கலாம் என்று முடிவு எடுக்கிறார். சுந்தரவல்லி ஹாலில் சந்தோஷமாக நடந்து கொண்டிருக்க அருணாச்சலம் தூங்கலையா என்று கேட்கிறார். சுந்தரவல்லி தூங்குற மாதிரியா நீங்களும் உங்க பையனும் பண்ணி இருக்கீங்க என்று கேட்கிறார்.

என்னவா நடிக்கிறீங்க என்று கேட்க நடுராத்திரில நின்னுகிட்டு என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கேட்க, நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க எல்லா அவார்டும் உங்களுக்கு தான் தரணும் அந்த அளவுக்கு நீங்க மருமக மேல பாசம் வச்சிருக்கீங்க, ஆனா அதுக்கு மேல உங்க பையன் சூர்யா நீங்க 16 அடி பாஞ்சிங்க அவன் 32வது பாஞ்சுட்டா எவ்வளவு டிராமா பண்ணி இருக்கான் நீங்க ரெண்டு பேரும் நடிச்சதை விட இந்த வேலைக்காரி போட்ட டிராமா அதை விட அதிகம் மொத்த பேரையும் இளிச்சவாயாக ஆக்கி இருக்கீங்க, நீ எதுக்காக இப்படி பேசுறன்னு எனக்கு புரியல என்று அருணாச்சலம் சொல்ல உங்களுக்கு புரிய வேணாம் நாளைக்கு காலைல உங்களுக்கு எல்லாத்துக்கும் பதில் தெரியும் நீங்க போய் படுங்க என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் நந்தினி இது எல்லாத்தையும் இருந்து எனக்கு விடுதலை கிடைக்கப் போகுது என்று நினைத்து சாமியிடம் வேண்டிக் கொள்கிறார். நான் இந்த வீட்டில இருந்து கிளம்பறதா வேணான்னு நீ தான் சொல்லணும் என்று சாமியிடம் சீட்டு குலுக்கி போட போக ரெண்டு சீட்டையும் நம்மளே எப்படி எடுக்கிறது என்று கல்யாணத்திற்கு போன் பன்னி கொஞ்சம் மேல வாங்க என்று கூப்பிடுகிறார். ஹாலில் சுந்தரவல்லி பார்த்த கல்யாணம் என்ன செய்வதென தெரியாமல் முழித்து விட்டு பதுங்கி போகலாம் என நகர்ந்து செல்ல சுந்தரவல்லி கூப்பிடுகிறார். எங்க போற வழியில் என்று கேட்க மேல சத்தம் கேக்குது அதற்காக கதவை சாத்த போறேன் என்று சொல்லி சமாளிக்க சரி போ என சொல்லுகிறார். மேலே வந்த உடன் நந்தினி சீட்டு குலுக்கி போட்டு சாமிகிட்ட உத்தரவு கேட்கணும்னு நினைக்கிறேன் அதுக்கு நீங்கதான் உதவி செய்யணும் என்று சொல்ல கல்யாணமும் சம்மதித்து சீட்டைக் குலுக்கி போட நந்தினி இரண்டில் ஒன்று எடுக்கிறார்.

நந்தினி பிரித்துப் பார்க்க குங்குமம் இருப்பதால் சந்தோஷப்படுகிறார். உடனே கல்யாணமும் உன் மனசுக்கு நீ சந்தோஷமா தான் இருப்ப போய் தூங்கு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கல்யாணம் தூங்கிக் கொண்டிருக்கும் நந்தினி கீழே வந்து பாத்திரம் கழுவ கல்யாணம் என்னம்மா விடிஞ்சு முடியாம பாத்திரம் கழுவுற போய் படுக்க வேண்டியது தானே உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மூணு மணிக்கு பாத்திரம் விளக்குவியா காலையில விளக்கினால் ஆகாதா என்று கேட்க நாளைக்கு விடிஞ்சா நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன் இது தான் கடைசி என்று மனதில் நினைக்கிறார். பாத்திரம் கழுவி விட்டு பாலை காய வைக்க எதுக்குமா இப்பவே டீ போடுற, என்று சொல்ல காலையில் நான் இருக்க மாட்டேன் என மனதில் மீண்டும் நினைக்கிறார். பிறகு கல்யாணத்திற்கு டீயை கொடுத்துவிட்டு பிறகு வாசலுக்கு வந்து பெருக்கி தண்ணீர் தெளிக்க கல்யாணம் வந்து வெளியில் உட்காருகிறார்.

நந்தினி கோலம் போட, நீ என்னம்மா இன்னைக்கு ஒரு முடிவோட இருக்க மார்கழி மாசம் கூட இவ்வளவு சீக்கிரம் எந்திரிக்க மாட்டாங்க என்று சொல்ல ஏன்னா இந்த வீட்டில நான் போடுற கடைசி போல இதுதான் என மனதில் நினைத்து விட்டு சென்றுவிட கல்யாணம் ஒன்னும் புரியாமல் இருக்கிறார். மறுநாள் காலையில் சுந்தரவல்லி வாசலில் வந்து கோலத்தை பார்த்துவிட்டு கல்யாணத்தை கூப்பிடுகிறார். யார் போட்ட கோலம் என்று கேட்க, நந்தினி போட்டதுதான் என்று சொல்லுகிறார். இவ்வளவு சீக்கிரம் ஏன் போட்டு இருக்கா என்று கேட்க, மூணு மணிக்கு வந்து பாத்திரலாம் கழுவுச்சி எதுக்குன்னே தெரியல என்று சொல்ல, சுந்தரவல்லி ஓ இந்த வீட்டை விட்டு போறதுனால எல்லா வேலையும் செய்யணும் நினைக்கிறாளோ எப்படியோ ஒன்னு இந்த வீட்டை விட்டு ஒழிஞ்சா சரி என்று நினைக்க நந்தினி பேக் உடன் வெளியே வருகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா தூங்கிக் கொண்டிருக்க நந்தினி பையில் எல்லாம் எடுத்து வைக்க இனிமே எங்க போனாலும் எங்கிருந்தாலும் இந்த ரூமை என்னால மறக்க முடியாது என்று நினைக்கிறார். நான் உங்க கூட இருக்கும்போது பாதுகாப்பா உணர்ந்தேன் எனக்காச்சி ஒரு நாள் திரும்ப பார்க்கும் போது என்று தூங்கிக் கொண்டிருக்கும் சூர்யாவிடம் நந்தினி பேசுகிறார்.

திடீர்னு என்கிட்ட வந்து நீங்க மாமனாரா நடிக்கிறீங்க சூர்யா புருஷனா நடிக்கிறான்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம் என்று சுந்தரவல்லி இடம் கேட்க அமைதியாக நிற்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 04-06-25
Moondru Mudichu Serial Today Promo Update 04-06-25