சுரேகா சொன்ன வார்த்தை, மாதவியால் ரஞ்சிதாவுக்கு வந்த ஆபத்து, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிடம் இன்னைக்கு நான் இங்கே படுத்துக்கவா இல்ல அவங்க கூட வெளியே படுத்துக்கவா என கேட்க உன்னுடைய இஷ்டம் நந்தினி இதுக்காக ஏன் இவ்வளவு யோசிக்கிற என்று சொல்ல, உடனே இந்த இரண்டு விரலில் ஒன்று தொடுங்க என்று கேட்கிறார். பிறகு சூர்யா ஒரு விரலைத் தொட நான் இங்கேயே படுத்துகிறேன் என சொல்லிவிட்டு படுத்து விடுகிறார். இருவரும் தூங்கி விட அந்த நேரம் பார்த்து கரண்ட் ஆஃப் ஆகிவிடுகிறது உடனே நந்தினி மெழுகுவர்த்தி ஏத்தி வைத்துவிட்டு சூர்யாவை பார்த்துக் கொண்டிருக்க அவரது கால்களில் ஷூ இருப்பதை கவனித்து விட்டு அதை கழட்டி சரியாக படுக்க வைத்து பெட்ஷீட் போட்ட பிறகு பக்கத்தில் உட்கார்ந்து சூர்யாவையே பார்த்துக்கொண்டு அப்படியே தூங்கி விடுகிறார். மறுநாள் காலையில் கல்யாணம் சுந்தரவல்லிக்கு காபி கொடுக்க டிரேவில் நிறைய கப் இருப்பதை பார்த்து யாருக்கு இதெல்லாம் என்று கேட்கிறார்.
உடனே அருணாச்சலம் வீட்ல இருக்கிறவங்களுக்கு அதான் இருக்கும் என்று சொல்ல, உடனே சுந்தரவல்லி வேலைக்காரன் குடும்பத்துக்கும் எனக்கும் ஒரே டிரேவில் காபி எடுத்துட்டு வருவியா என்று கோபப்பட்டு கல்யாணத்தின் மூஞ்சியில் காபியை தூக்கி வீசுகிறார். உடனே அருணாச்சலம் கல்யாணம் முகத்தை துடைத்துவிட்டு எழுப்பி நிற்க வைத்து விட்டு சுந்தரவல்லி கோபத்தில் திட்டுகிறார். நீ பண்ற விஷயம் ரொம்ப கேவலமா இருக்கு சுந்தரவல்லி என்று திட்ட அவர் சென்று விடுகிறார் உடனே அருணாச்சலம் கல்யாணத்திடம் மன்னிப்பு கேட்கிறார். ரூமில் நந்தினி குடும்பத்தினர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க ரஞ்சிதா பீச்சுக்கு போலாமா என்று கேட்கிறார். உடனே புனிதா நந்தினியிடம் எங்களையெல்லாம் மாமான்னு சொல்ல சொன்னாரு. உன்ன மட்டும் ஏன் சொல்ல சொல்லல என்று கேட்கிறார். அதெல்லாம் பழகிடுச்சு என்று நந்தினி சொல்லுகிறார்.
கல்யாணம் வந்து அனைவருக்கும் காபி கொடுக்க, நந்தினி என்ன அண்ணா சட்டையில் கரை என்று கேட்க, கல்யாணம் நடந்த விஷயத்தை சொல்லுகிறார். உடனே புனிதா கோபப்பட்டு திட்டுகிறார். விடுங்கம்மா இதெல்லாம் பழகிப்போச்சு என்னதான் இப்படி எல்லாம் இருந்தாலும் இந்த வீட்ல ரெண்டு தெய்வம் இருக்கு ஒன்னு பெரியய்யா ஒன்னு சின்னையா அவங்க ரெண்டு பேரும் நந்தினியை உள்ளங்கையில வச்சு தாங்குறாங்க என்று சொல்லுகிறார். இப்போ நெனச்சா கூட நந்தினியை ஓனர் சீட்டில் உட்கார வச்சு அழகு பாப்பாரு என்று சொல்லுகிறார். என்ன புள்ளைய கட்டி கொடுத்துட்டு இப்படி எல்லாம் நடக்குதுன்னு கவலைப்படாதீங்க எங்க சின்னையா பார்த்து பாரு அதுவும் இல்லாம என் தங்கச்சிக்கு நான் இருக்கேன் என சொல்லுகிறார். கல்யாணம் போன பிறகு சிங்காரம் காசு பணம் இருந்தால் இப்படி தான் நடந்துபாங்க போல என்று சொல்லிவிட்டு நாம் எதையும் கண்டுக்க வேண்டாம் என சொல்ல சரி நான் கீழே போய் வேலையை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விடுகிறார்.
கிச்சனில் நந்தினி வேலை பார்த்துக்கொண்டு இருக்க மாதவி வந்து பொறுமையாக பாசமாக பேசுகிறார். இந்த வீட்டில எவ்வளவு பிரச்சனையை தாண்டி நீ இருந்திருக்க இதே வேற ஒரு பொண்ணா இருந்தா எப்பயோ போயிருப்பார் என்று சொல்லுகிறார் அதுவும் இல்லாம நான் உன்கிட்ட மன்னிப்பும் தேங்க்ஸ்னு சொல்லணும் என்று சொல்லுகிறார். இதுக்கு முன்னாடி உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தி பேசி இருக்கேன் அதற்காக சாரி தேங்க்ஸ் எதுக்குண்ணா எனக்கு எப்பவுமே தீபாவளி சீர் எனக்கு கிடைச்சது கிடையாது அது என் மனசுல இருப்போம் ஆனால் அதை பெருசா வெளிக்காட்டிக்க மாட்டேன் அதுக்காக நான் ஏங்கி இருக்கேன் ஆனா நீ வந்து அதை கொடுக்கும்போது எனக்கு சந்தோஷமா இருந்தது ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்லுகிறார் எங்க அம்மா தான் உன்ன ரொம்ப திட்டுறாங்க அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று சொல்ல அதெல்லாம் நான் மறந்துட்டேன் என்று நந்தினி சொல்லுகிறார்.
அவங்க வயசானவங்க ஆனா நம்ம தான் இந்த வீட்டில ரொம்ப நாளைக்கு இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும் என்று சொல்ல நீங்க இப்படி சொல்றது ரொம்ப ஆறுதலா இருக்கு என்று சொல்ல இருக்குதா இருக்கட்டும் இருக்கட்டும் உனக்கு ஒரு பெரிய சூடு வைக்கிறேன் என்று நினைத்து விட்டு இதுக்கு மேல எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு என்று சொல்லிவிட்டு போக பிறகு நந்தினி பார்த்துவிட்டு தீபாவளிக்காகா குடும்பம் வந்திருக்காங்க நான் வைக்கப் போற வெடியில உன் குடும்பம் எப்படி சிதற போகுது பாரு என்று மனதில் நினைத்து விட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் ரஞ்சிதா சோகமாக உட்கார்ந்து இருக்க என்னாச்சு என்று சூர்யா கேட்க, எனக்கு இந்த ரொம்ப போர் அடிக்குது என்று சொல்லுகிறார் சரி வா நம்ம போய் பட்டாசு வாங்கலாம் என்று ஏன் இந்த கூப்பிடு டா வேணா உங்க அம்மா ஏதாவது சொல்லுவாங்க என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல உனக்கு என்னென்ன எல்லாம் புடிச்சிருக்கு என்கிட்ட சொல்லு உனக்கு எல்லாமே நான் வாங்கி தரேன் என சொல்லி சூர்யா அழைத்துச் செல்ல சுந்தரவள்ளியும் சுரேகாவும் பார்க்கின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் புனிதா நந்தினி மற்றும் சூர்யாவின் கையை சேர்த்து வைத்து மருதாணி வைத்துவிட்டு இந்த கையை எடுத்துட்டீங்கன்னா அக்கா மேல பாசம் இல்லாம ஆகிடும் என்று சொல்லுகிறார். உடனே நந்தினிக்கு முகத்தில் சூர்யா முகத்தை வைத்து தேய்த்து விடுகிறார். மறுபக்கம் சுரேகா நம்ம வீட்டுக்குள்ளே வந்து அந்த கும்பல் என்ன கூத்தடிச்சுக்கிட்டு இருக்கு தீபாவளி செலிப்ரேஷன் வர அவங்களுக்கு என்று சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகிறார். மறுபக்கம் ரஞ்சிதாவிடம் மாதவி உனக்கு பிடிக்குமா போய் எடுத்துக்கோ என்று சொல்ல ரஞ்சிதா அலறும் சத்தம் கேட்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

