நந்தினியிடம் பத்திரிக்கையை கொடுக்கும் சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லிக்கு ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி ஒரு ஃபைல் அவசரமா தேவைப்படுது என்றும் அது இன்னும் ஒரு மணி நேரத்தில் வேண்டு மென்று சொல்ல அவர் வேகமாக பைலை எடுக்கிறார். மறுபக்கம் கல்யாணம் சொல்லிக் கொடுக்க நந்தினி லெமன் சோடா போடுகிறார். அதனை சூர்யாவிற்கு எடுத்துக்கொண்டு வரும் போது வேகவேகமாக சுந்தரவல்லி வர எத்தனை தடவை சொல்றேன் இந்த மூஞ்சிய வெச்சுகிட்டு எதிரில் வராத என்று திட்டுகிறார். அந்த நேரம் பார்த்து சூர்யா கீழே இறங்கி வருகிறார். நந்தினியை திட்டுவதை பார்த்த உடனே போட்டோவை பார்த்து உன் முகத்தை பார்த்தால் எனக்கு அவ்வளவு லக்கி எங்க வீட்டுக்கு கிடைச்ச பொக்கிஷம் என்று பேசுகிறார். தங்கமே செல்லமே நீ ஃபுல்லா ஒரு லக்கி ஃபெல்லோ என்று கொஞ்சுகிறார்.
கடுப்பாகி சுந்தரவல்லி வெளியே போக அருணாச்சலம் போன் பேசிக் கொண்டிருக்கும்போது ஆபீசுக்கு போயிட்டு வரேன் என்று சொல்லி கிளம்ப சுந்தரவல்லியின் கையில் இருக்கும் பைலை பார்த்துவிட்டு, பதறி சுந்தரவல்லி என கூப்பிட்டும் காரில் அவர் கிளம்பி விடுகிறார். அருணாச்சலம் டென்ஷனாக இருப்பதை பார்த்து மாதவி விசாரிக்கிறார். அவசரத்தில் அருணாச்சலம் பத்திரிக்கை என உலர மாதவி இந்த பத்திரிக்கையா என்று பாருங்கள் என்று சொல்லுகிறார். இப்ப எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கின்றனர். அவர் ரிஜிஸ்டர் பண்ண போகும் விஷயத்தை மாதவியிடம் சொல்ல உடனே மாதவி இதை ஏன் எங்க கிட்ட இருந்து மறைச்சீங்க, நாங்களும் நந்தினி இந்த வீட்ல மருமகளா வாழனும்னு தான் நினைக்கிறோம் என்று சொல்லுகிறார். என்ன பண்ணனும்னு சொல்லுங்க நாங்களும் ஹெல்ப் பண்றோம் என்று சொல்ல அதெல்லாம் இப்ப இருக்கட்டுமா இப்போதைக்கு சுந்தரவல்லி கிட்ட இருந்து அதை வாங்கணும் என்று சொல்ல அவர்களும் கிளம்புகின்றனர்.
சூர்யாவிடம் நந்தினி உங்க அம்மா வரும்போது எதுக்கு போட்டோல அப்படி பண்றீங்க என்று கேட்கிறார். அப்பவே அந்த போட்டோவை எடுனா ஏன் எடுக்க மாட்டீங்க என்று கேட்க உடனே கல்யாணத்தை கூப்பிட்டு அந்த போட்டோ அங்க இருக்குறது எப்படி இருக்கு என்று கேட்கிறார். சூப்பரா இருக்கு ஐயா என்று சொல்லுகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் நந்தினி நீங்க எப்ப தான் ஐயா மாறுவீங்க என்று கேட்கிறார். நான் ஸ்டெடியா நல்லா தானே இருக்கேன் நான் எதுக்கு மாறனும் என்று பாட்டு பாடுகிறார். உடனே மீண்டும் லெமன் சோடா போட்டு எடுத்துக் கொண்டு வர சொல்லுகிறார். கல்யாணம் போய் போட்டு எடுத்துட்டு வாம்மா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்
குடித்த கொஞ்ச நேரத்தில் சூர்யா வாந்தி எடுக்கிறார். ஐயா இப்படி எல்லாம் எடுக்க மாட்டாரு என்று சொல்ல நந்தினி பெரிய சாதனைதான் என்று சொல்லுகிறார். உடனே அங்கிருந்து சூர்யா வெளியில் வந்து உட்காருகிறார். மாதவி அங்கு பத்திரிக்கையை வைத்திருக்க அந்த பத்திரிக்கை என் மீது படுக்கிறார். மறுபக்கம் பரபரப்பாக அருணாச்சலம் கார் ஓட்டிக்கொண்டு போக மாதவியை போன் பண்ணி சொல்லி டைவர்ட் பண்ண சொல்லுகிறார். உடனே போன் பண்ணி நீங்க எங்க இருக்கீங்களோ அங்கையே இருங்க முக்கியமான ஒரு விஷயம் பேசணும் என்று சொல்லுகிறார் என்ன விஷயமா இருந்தாலும் பரவால்ல நான் வீட்டுக்கு வந்த உடனே பேசிக்கலாம் என்று போனை வைக்கிறார். உடனே சுரேகா ஃபோன் போட்டு கட் பண்ணிடாதீங்கம்மா நாங்க உங்களை தேடித்தான் வந்து கிட்டு இருக்கோம் அங்கேயே இருங்க என்று சொல்லுகிறார் உடனே என்ன விளையாடிகிட்டு இருக்கீங்களா ரெண்டு பேரும் என்று கேட்கிறார் சுந்தரவல்லி.
உடனே மாதவி போனை வாங்கி நீங்க இப்ப கரெக்டா எங்க போய்கிட்டு இருக்கீங்க சொல்லுங்க என்று கேட்க சுந்தரவல்லி சொல்லுகிறார். உடனே நீங்க மூணு பேரும் போய் எங்கனா பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல போய் சேந்துருங்க என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். உடனே காரை எதிரில் நிறுத்திவிட்டு கீழே இறங்க என்னாச்சு என்ன பிரச்சனை என்று கேட்க அசோகன் சுந்தரவல்லியை திரும்பி நிற்க சொல்லி காலை பார்க்க சொல்லுகிறார். அவர் காலில் ஒரு பக்கம் லேடிஸ் செப்பலும் மறுபக்கம் ஜென்ட்ஸ் சப்பனும் இருக்க நீங்க மாத்தி போட்டுன்னு வந்துட்டீங்க அத்தை என்று சொல்லுகிறார் ஆனால் சுந்தரவல்லி நான் கரெக்டா தான் போட்டுட்டு வந்து இருக்கேன் என்று பேசிக் கொண்டிருக்கும்போது மாதவி காரில் இருக்கும் கவறை எடுத்து விடுகிறார். உடனே சரி நீங்க போயிட்டு வாங்க என்று சொல்லி அனுப்ப வீட்டுக்கு போங்க உங்களை வந்து வச்சுக்கிறேன் என்று சொல்லி சுந்தரவல்லி மூன்று பேரையும் திட்டிய அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் சூர்யா அந்த கல்யாண பத்திரிக்கையை எடுத்து படித்துப் பார்க்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு நீங்க போயிட்டு வந்துருங்க என்று சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் சொல்ல அவர் நானா என்று கேட்டு ஷாக் ஆகிறார்.
மறுபக்கம் டேபிளில் சூர்யா பத்திரிக்கை எடுத்து பார்த்துக் கொண்டிருக்க காரில் வரும் மாதவி டேபிள் மேலே பத்திரிக்கையை வச்சுட்டு வந்துட்டேன்பா என்று சொல்ல ,வேகமாக வருகின்றனர். அதற்குள் சூர்யா நந்தினி விளக்கேற்றிக் கொண்டிருக்க அவரிடம் எடுத்துக் கொண்டு வந்து பத்திரிக்கையை கொடுக்க கையில் எண்ணையா இருக்கு சார் என்று சொல்லுகிறார் சரி நானே படித்து சொல்கிறேன் என்று சூர்யா பத்திரிக்கையை படிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.