மாதவிக்கு வந்த சந்தேகம், நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ,அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் மாதவியின் கையில் பத்திரிக்கை இருக்க நம்ம சூர்யா கல்யாணத்துக்கு அர்ச்சனா கூட பேர் போட்டு தானே பத்திரிக்கை அடிசோம் இந்த பத்திரிக்கையை யார் அடிச்சது என்று யோசிக்கிறார்.
அருணாச்சலம் பூஜை ரூமில் பத்திரிக்கை வைத்து சாமி கும்பிட உடனே சுந்தரவல்லி வந்து என்ன பத்திரிக்கை என்று கேட்கிறார். மறுபக்கம் நந்தினி உடன் சூர்யா சென்றிருக்க அவருக்கு இளநீர் வாங்கி கொடுக்கிறார். நான்தான் வேணாம்னு சொன்ன இல்ல எதுக்கு இப்படி பண்றீங்க எப்பவுமே மத்தவங்களோட விருப்பத்தை கேட்கவே மாட்டீங்களா என்று நந்தினி கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.