Pushpa 2

சூர்யாவிடம் நந்தினி கேட்ட கேள்வி, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று. மூன்று முடிச்சு நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial promo update 05-12-2024
moondru mudichu serial promo update 05-12-2024

நேற்றைய எபிசோடில் அந்த வயதான ஜோடி சூர்யா மற்றும் நந்தினியை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றனர். உடனே சூர்யா இன்னைக்கு மட்டும் வேணாம் என்று சொல்ல ஏம்பா உங்களுக்குள்ள சண்டையா என்று கேட்கிறார். புருஷன் பொண்டாட்டி நான் சண்டை இருக்கத்தான் செய்யும் என்று அட்வைஸ் கொடுக்கிறார். உடனே அவர்கள் கிளம்பிய உடன் இவர்கள் இருவரும் அருணாச்சலத்திடம் வந்து கிளம்பலாம் என்று சொல்லுகின்றனர். அவர்கள் மூவரும் வீட்டுக்கு கிளம்பி வர சுந்தரவல்லி டென்ஷனாக நடந்து கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து சுந்தரவள்ளியி தோழி போன் பண்ணுகிறார்.

உடனே உன்னை போலீஸ் புடிச்சுகிட்டு போயிட்டாங்கலாமே சுந்தரவல்லி எப்படிப்பட்ட ஆளு என்றெல்லாம் பேசி வெறுப்பேற்றுகிறார். பிறகு இப்ப எங்க இருக்க வீட்லயா? போலீஸ் ஸ்டேஷன்லையா? என்று எல்லாம் கேட்க சுந்தரவல்லி கடுப்பாகி போனை கட் பண்ணி விடுகிறார். மாதவி சுரேகா மற்றும் அசோகன் மூவரும் நந்தினியை பற்றி பேசிக் கொண்டிருக்க கல்யாணம் காபி கொண்டு வருகிறார்.

நீங்க போய் அம்மாவுக்கு காபி கொடுங்க என்று சொல்ல மாதவி அவங்க டென்ஷனா இருக்காங்க இந்த டைம்ல எதுக்கு அனுப்புற என்று கேட்க எந்த மாதிரி கோவத்துல இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம் என்று அனுப்பி வைக்கின்றனர். கல்யாணம் தயங்கிக் கொண்டே உள்ளே வர காபியை கொடுத்தவுடன் சுந்தரவல்லி வேண்டாம்போ என சொல்லி திட்டி அனுப்பி விடுகிறார். மறுபக்கம் மூவரும் வீட்டுக்குள் வர நந்தினி அடைப்பட்டு கிடந்த காரை பார்த்து அங்கேயே நிற்கிறார். அருணாச்சலம் அவரைக் கூப்பிட்டு உள்ளே செல்ல, அசோகன் எங்க போயிருந்தீங்க என்று கேட்க கோவிலுக்கு போயிருந்தோம் பிரசாதம் கொடும்மா என்று சொல்லுகிறார்.

உடனே அருணாச்சலம் சுந்தரவல்லி எங்கே என்று கேட்க அம்மா ரொம்ப டென்ஷன இருக்காங்கப்பா என்று சொல்லும்போதே சுந்தரவல்லி அவசர அவசரமாக ரூமிலிருந்து வெளியே வந்து கிச்சனை தேடி கலைக்கிறார். என்னாச்சு என்று கேட்க கல்யாணத்திடம் பெட்ரோல் டீசல் எங்க இருக்கு எடுத்துக்கொண்டு வா என்று சொல்ல அவர் அதை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். உடனே வேகமாக வெளியே வந்த சுந்தரவல்லி அந்த பெட்ரோலை கார் முழுக்க ஊத்துகிறார். இதனைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து நிற்கின்றனர். சுந்தரவல்லி தீப்பெட்டியை எடுத்து கொளுத்த போக அருணாச்சலம் என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்ற திட்டுகிறார். இவ இந்த காருக்குள்ள இருந்தால்ல அதனால தானே இவ்வளவு பிரச்சனை இந்த காருக்கு தீட்டு பட்டிருக்கு என்று ஆக்ரோஷமாக பேச அருணாச்சலம் திட்டுகிறார்.

உள்ளே கோபமாக வந்த சுந்தர வள்ளியிடம் கோயிலுக்கு போயிட்டு வந்தது நிம்மதியா இருந்துச்சு.ஆனா இங்க நிம்மதியாக இருக்க விட மாட்டியா என்று கேட்க அப்ப நான் தான் நிம்மதியை கெடுக்கிறேனா என்று சுந்தரவல்லி சண்டை போடுகிறார். எல்லா பிரச்சனைக்கும் காரணம் அவதான் என்று சொன்னால் அருணாச்சலம் அவ தான் பிரச்சனையிலிருந்து உன்னை காப்பாத்தண என்று சொல்ல நான் அவகிட்ட கேட்டேனா அவ பிச்சை போட்டு நான் காப்பாத்தணுமா? என்று கேள்வி கேட்கிறார். இப்ப என்ன உனக்கு கார கொலுத்தணுமா என்று சுந்தரவல்லி கேட்க இல்ல விட்டா அவளே கொளுத்துவேன் என்று கோபப்படுகிறார்.

உடனே சுந்தரவல்லி உட்கார வைத்து நடந்து விஷயங்களை பொறுமையாக சொல்லி புரிய வைக்கிறார். ஆனால் சுந்தரவல்லி இதுவரைக்கும் நம்ம வீட்ல ஏதாவது பிரச்சனை வந்திருக்கா போலீஸ் வந்திருக்கா ஆனா இன்னைக்கு குடும்பத்தோட போலீஸ் ஸ்டேஷன்ல நிக்கிற அளவுக்கு யாரால வந்து இருக்கு இவலால தானே என்று சொல்லுகிறார். இவ இந்த வீட்ல இருக்கறதுனால தான் குடும்பத்தோட அசிங்கப்படுறோம் என்று சொல்லுகிறார்.

என்னை இவ்வளவு கேள்வி கேக்குறீங்களே தோட்டத்துல வேலை செய்யறவ எதுக்கு வீட்டு முதலாளி பையன கவுத்து தாலி கட்டிக்கிட வேண்டும் என்று கேட்க உங்களுக்கு துப்பு இல்ல என்று சொல்ல,நந்தினி கண்கலங்குகிறார். உடனே நந்தினி அங்கிருந்து வந்து நாங்க யாருக்கும் நம்பிக்கை துரோகம் பண்ணலாமா என்று சொல்ல பேசாதே என்று அதட்டுகிறார். இதுவரை நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் சொல்லி போலீஸ் ஸ்டேஷன்ல நடந்ததையும், நகை திருட்டு முதல் நந்தினி வீட்டை விட்டு வெளியில் போனது வரை அனைத்தையும் சொல்லுகிறார். உடனே சுரேகா அம்மா இன்னைக்கு ஃபுல் ஃபார்ம் ல இருக்காங்க அக்கா என்று சொல்ல நம்ம வேடிக்கை மட்டும் பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சூர்யா கார் ஹாரன் சத்தமாக அடிக்கிறார்.

உடனே சுரேகா வெளியில் வர ஏ குட்டிச்சாத்தான் போய் ஃபேமிலி எல்லாரையும் கூட்டிட்டு வா என்று சொல்லுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் வெளியே வருகின்றனர். எல்லாரும் வந்துட்டீங்களா என்னோட தாய்குலம் எங்கே என்று தேடுகிறார்.

அருணாச்சலம் இப்ப எதுக்கு வெளிய வரச் சொல்லி இருக்க என்று கேட்க ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது பேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் இருக்கணும் அதனால தான் என்று சொல்லுகிறார். உடனே என் பொண்டாட்டி நந்தினி வா என்று கூப்பிடுகிறார். பிறகு கார் மேல் மூடியிருந்த கவரை நந்தினியை திறக்க சொல்ல நந்தினி பிறந்த உடன் அதில் சூர்யா நந்தினி என்று எழுதியுள்ளது. இதை பார்த்த சுந்தரவல்லி டென்ஷன் ஆகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் காரில் நந்தினி சூர்யா என்று பெயர் எழுதியது மட்டுமல்லாமல் நாளைக்கு காலைல நந்தினி இல்லம் என்று பிளக்ஸ் வச்சிருவேன் என்று சூர்யா சொல்லுகிறார் இதனால் சுந்தரவல்லி ஏய் என சொல்லுகிறார்.

தயவு செஞ்சு உங்கள கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன் உங்க அம்மாவை வெறுப்பேத்த என்ன யூஸ் பண்ணாதீங்க என்று நந்தினி சொல்லுகிறார். இதுக்கு முன்னாடி அந்த தாய்க்கிழவி என்னென்ன செஞ்சாங்கன்னு தெரிஞ்சு நீங்க இப்படி பேசுறீங்களா என்று அருணாச்சலத்திடம் சூர்யா கேட்கிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 05-12-2024
moondru mudichu serial promo update 05-12-2024