
புனிதாவிற்கு வரும் சிக்கல், சுதாகருக்கு பதிலடி கொடுத்த சூர்யா, மூன்று முடிச்சு எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நந்தினி தங்கைகளை தோப்புக்கு போகலாம் என்று கூப்பிட அந்தத் தோப்புக்கு எதுக்கு போகணும் அதுக்கும் நம்மளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு இப்ப அந்த தோப்பு சுதாகர் பார்த்துக் கொள்கிறான் எதனா பிரச்சனையாகும் என்று சொல்ல நந்தினி இத்தனை வருஷமா நம்ப காப்பாத்திருக்கோம் என்று சொல்ல நந்தினி ரஞ்சிதாவை கூப்பிடுகிறார் ரஞ்சிதா வரேன் என்று சொல்ல சூர்யா அங்கு வர எங்க போறீங்க என்று கேட்க தோப்புக்கு என்று சொல்ல சரி வாங்க போகலாம் என்று மூவரும் கிளம்புகின்றனர்.
தோப்புக்குள் வந்த நந்தினி தென்னை மரத்தை ஆசையாக பார்க்க என்ன நந்தினி இப்படி பாக்குற என்று சொல்ல வெறும் மரம்தான் அது என்று சொல்லுகிறார். அது உங்களுக்கு வெறும் மரமான இது எங்களோட உசுரு நாங்க இது கூட தான் வளர்ந்தோம். எல்லா மரத்துக்கும் நான் யாரு நான் பேசுறது எல்லாமே புரியும். என்று எமோஷனலாக பேச சூர்யா சரி போய் எல்லாத்தையும் சுத்தி பாரு போ என்று சொல்ல நந்தினி சந்தோஷமாக மரத்திற்கு முத்தம் கொடுத்து பேசிக் கொண்டிருக்கிறார் மேலிருந்து ஒரு தேங்காய் விழுகிறது. உடனே சூர்யாவை கூப்பிட்டு இந்த மரத்துக்கிட்ட நான் பேசினதனால இது உனக்காக எடுத்துக்கிட்டு போ என்று என்கிட்ட சொல்லுது என்று சொல்லுகிறார்.
சரி நீ போய் சுத்தி பாரு நான் வரன் என்று சொல்லிவிட்டு சூர்யா கிளம்புகிறார். பிறகு நந்தினியும் ரஞ்சிதாவும் ஓலைகளை வைத்து ஓரம் போட சுதாகர் யாரைக் கேட்டு இந்த தோப்புக்குள்ள வந்தீங்க உங்களுக்கு எவ்வளவு திமிரு எகத்தாளம் இருக்கும். 15 வருஷமா எங்க பங்காளி குடும்பத்தை ஏமாத்துறது உங்களுக்கு போதாதா வெளியே போடி என்று சொல்லுகிறார். நாங்க சும்மாதான் பார்க்க வந்தோம் என்று சொல்ல இவ பெரிய பண்ணையாரு தோப்பு துறவ பார்க்க வந்துட்டா போங்க என்று விரட்டியடிக்க சூர்யா நந்தினி ஒரு நிமிஷம் என்று நிக்க வைக்கிறார். என்ன பங்காளி இவ்வளவு தூரம் என்று சுதாகர் கேட்க ஏன் நான் வரக்கூடாதா என்று கேட்க இது உங்களோட தோப்பு நீங்க வரக்கூடாதுன்னு சொல்லுவேனா. இப்பதான் வெளியே போக சொன்னீங்க என்று சொன்ன அது உங்கள இல்ல இந்த தோட்டக்காரியை சொன்ன என்று சொல்லுகிறார்.
இந்த தேங்காய எடுத்துட்டு போறதுனால என்ன பிரச்சனை என்று கேட்க நீங்க முதலாளியா இருக்கலாம் ஆனா எங்க இருக்கிற ஒரு தேங்காய், தேங்காய் மட்டை முதற்கொண்டு எல்லாத்தையும் அவங்க அப்பாவுக்கு கணக்கு கொடுக்கணும் கண்டதுங்களா வந்து எடுத்துட்டு போனா நான் எப்படி கணக்கு கொடுக்க முடியும் என்று சொல்லுகிறார். நந்தினி சரி வாங்க சார் இங்க இருந்து போயிடலாம் என்று சொல்ல ஒரு நிமிஷம் நந்தினி என்று சொல்லி சூர்யா கீழே போட்ட தேங்காய் எடுத்து நந்தினியிடம் கொடுத்துவிட்டு செல்கின்றனர்.
சூர்யா படுத்துக்கொண்டிருக்க சிங்காரம் அவரிடம் கிராமத்தைப் பற்றியும் அவரது அப்பா வளர்ந்த விதத்தைப் பற்றி சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டிருக்கின்றனர் மறுபக்கம் நந்தினி பாத்திரம் தேய்த்து கொண்டிருக்க, என் பேத்திக்கு கடவுள் எல்லாத்தையும் கொடுத்திருக்கான். மாமியாரும் நாத்தனார் ஒழுங்கா இல்லனாலும் அந்த தம்பி நல்ல குணமா தான் இருக்கு என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினி எனக்கு நடந்தது கல்யாணமே இல்லை என்று உறுதியாக சொல்லுகிறார். புடிச்சு நடந்தா தான் கல்யாணம்னு கிடையாது கழுத்துல தாலி ஏறிட்டாலே நம்ம சகிச்சுட்டு வாழ்ந்துதான் ஆகணும் ஒரு விஷயத்தையே பிடிச்சுகிட்டு அப்படியே தொங்க கூடாது என்று நந்தினிக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.
உடனே நந்தினியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அம்மாச்சி உங்க அம்மா போனதுக்கு அப்புறம் உன் தங்கச்சிங்களுக்கு அம்மாவாக இதுக்கு அப்புறமாவது உன்னோட லைஃப் பாரு என்று சொல்லுகிறார். உடனே நந்தினி இதுக்கு தான் பொங்கலுக்குவானு கூப்டியா என்று கேட்க, இல்ல நான் வேற ஒன்னு கேட்க வந்தேன் என்று சொல்ல கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகுது ஏதாவது விசேஷம் இருக்கா என்று கேட்க நந்தினி கோபப்பட்டு அப்படியே மண்டையில் தூக்கி அடிச்சிட போறேன் என்று கோபப்பட்டு கிட்ட எனக்கு ஆசை இருக்காதா என்று அம்மாச்சி சொல்லுகிறார். இதையெல்லாம் சிங்காரம் கேட்டு கண்கலங்கி நிற்கிறார். நீ இப்படியே எவ்வளவு நாளைக்கு இருப்ப முதல்ல ஒரு புள்ளைய பெத்துக்கிற வழிய பாரு நீ என் மேல எவ்வளவு வேணா கோபப்படு ஆனா நான் சொல்றத கொஞ்சம் யோசி என்று சொல்லுகிறார். மறுநாள் காலையில் சிங்காரம் கோவிலுக்கு இன்னும் எவ்வளவு நேரம் கிளம்பிகிட்டு இருக்கீங்க டைம் ஆவது என்று சொல்ல நான் மட்டும் போயிட்டு வரேனேப்பா என்று சொல்லுகிறார். அது எப்படி மா சின்னவர விட்டுட்டு போவ புருஷன் பொண்டாட்டியா ரெண்டு பேரும் சேர்ந்து தான் போகணும் என்று சொல்லி அட்வைஸ் கொடுக்கிறார்.
புனிதா சைக்கிளில் வந்து கொண்டிருக்க அங்கு ஒருவன் வந்து லவ் பண்ணுவதாக சொல்லி டார்ச்சர் செய்கிறார். நீ ஒரு மாசம் மட்டும் என்னை லவ் பண்ணு அதுக்கப்புறம் நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கோ என்ற சொல்லுகிறார். நான் கெட்ட பையன் எல்லாம் இல்ல நான் ரொம்ப நல்லவன் கெட்ட பயலா இருந்தா எப்பவோ தூக்கிட்டு போயிருப்பேன். நம்ம எங்கேயாவது வெளியே போகலாமா பாண்டிச்சேரி போகலாமா என்று பேசிக்கொண்டே இருக்க புனிதா தயவு செஞ்சு என்னை விட்டுடு என்று சொல்லுகிறார். புனிதா அங்கிருந்து கிளம்ப பார்க்க சைக்கிளை நிறுத்தி உங்களுக்கெல்லாம் மரியாதையா சொன்னா புரியாது என்று சொல்ல ரஞ்சிதா இதனை பார்த்துவிட்டு நந்தினியிடம் சொல்லிவிடுகிறார்.
