Pushpa 2

கம்ப்ளைன்ட் கொடுக்கும் சூர்யா,மினிஸ்டர் போட்ட திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichi serial promo update

moondru mudichi serial promo update

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சுரேகா மற்றும் மாதவியை உங்க அப்பா என்கிட்ட இருந்து விஷயத்தை மறைச்சா அது எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல அவரு எப்பவுமே திருந்த மாட்டாரு ஆனால் நீங்க ரெண்டு பேர் எதுக்கு மறைச்சிங்க என்று கேட்க நிஜமாவே நாங்க ஆண் பாவம் தான் படம் பாத்துட்டு இருந்தோம் என்று சுரேகா சொல்ல படம் பார்த்துட்டு இருக்கீங்களா இல்ல எனக்கு படம் காட்டிட்டு இருக்கீங்களா என்று கேட்கிறார். உடனே மாதவி நீங்க டென்ஷன் ஆகிடுவீங்க என்று ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு சொல்லலாம்னு இருந்தேன் என்று சொல்லுகிறார்.

இவர்கள் பேசிக் கொண்டே இருக்க இந்த நேரம் பார்த்து சூர்யா காரில் வருகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக சூர்யாவின் கார் சுந்தரவள்ளியின் கார் டிக்கியில் மோதி ஓப்பனாகிறது. இறங்கி வந்த சூர்யா டிக்கி ஓபன் ஆகியதை பார்த்து க்ளோஸ் செய்து விட்டு சென்று விடுகிறார். சூர்யாவை பார்த்த சுந்தரவல்லி கூப்பிட்டு ஸ்வீட் கொடுக்கிறார். எதுக்கு என்று கேட்க நம்ம எதுக்காக ஸ்வீட் சாப்பிடுவோம் நல்ல விஷயம் நடந்தா தானே அதுதான் நடந்திருக்கு என்று சொல்லுகிறார். நீ நந்தினி மாலினு கூப்பிட்டு தெரிஞ்சுக்கிட்டு இருந்தியே அவ இந்த வீட்டை விட்டு போயிட்ட இல்ல அந்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டாம்மா என்று சொல்ல சூர்யா கோபமாகி உள்ளே சென்று விடுகிறார்.

உடனே சிங்காரம் அழுது கொண்டே வீட்டுக்குள் வந்து நந்தினி எங்கம்மா இருக்க என்று கத்தி டிக்கி பக்கத்தில் கதறி அழுகிறார். சிங்காரத்தின் குரல் கேட்டு நந்தினி லேசாக மயக்கம் தெளிகிறது. உடனே வீட்டின் முன் ஐயா ஐயா என்று கூப்பிட்டுக் கொண்டோம் நந்தினி என்று கத்தி கொண்டோம் சிங்காரம் ஓட தடுக்கி கீழே விழுந்து விடுகிறார் அருணாச்சலம் அவரைத் தூக்கி விட யாரெல்லாமோ என்னென்னமோ சொல்றாங்க ஐயா அதெல்லாம் இல்ல தானே என் பொண்ணு வீட்டுல தானே இருக்கா கூப்பிடுங்க என்று சொல்ல இல்ல சிங்காரம் நந்தினி வீட்டில் இல்லை என்று சொன்னவுடன் சிங்காரம் இன்னும் அதிகமாக அழுகிறார்.

உடனே சுந்தரவல்லி இப்ப எதுக்கு வீட்டு வாசல்ல நின்னு ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்க என்று சொல்லி நந்தினி அசிங்கமாக பேசுகிறார். உடனே அருணாச்சலம் உனக்கு எந்த நேரத்துல என்ன பேசணும்னு தெரியாதா அவரே ஒரு பொண்ண காணும்னு துடிச்சிட்டு போயிருக்காரு அவர்கிட்ட போய் எந்த வார்த்தை பேசுற என்று கேட்க நான் ஒன்னும் தப்பா பேசலையே என்று சுந்தரவல்லி சொல்லுகிறார் இதுக்கு மேல தப்பா பேச என்ன இருக்கு என்று சொல்லி சுந்தரவள்ளியின் வாயை அடக்குகிறார்.

சிங்காரம் அருணாச்சலத்திடம் என்ன நடந்தது என்பதை விசாரிக்க இரண்டு நாட்களுக்கு முன் நந்தினி தொலைந்து போன விஷயத்தை சொல்ல அப்போ என் குலசாமி தொலைந்து போச்சா என்றெல்லாம் மீண்டும் அழுகிறார். நந்தினி எங்கிருந்தாலும் வந்துருமா என்னால தாங்க முடியாது என்று கத்த டிக்கி குள்ள இருக்கும் நந்தினி அப்பா அப்பா என பேச முயற்சிக்கிறார். அந்த நேரம் பார்த்து போலீஸ் வர நந்தினி மயங்கி விடுகிறார். வீட்டுக்கு வந்த போலிஸ் இங்க நந்தினி யாரு என்று கேட்க அருணாச்சலம் என்னோட மருமகதான் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி ஒரு நிமிஷம் நீங்க யாரு எதுக்கு வந்து இப்ப கேட்டுகிட்டு இருக்கீங்க என்று கேட்க நாங்க ஒன்னும் சும்மா வந்து கேட்கல உங்க மருமகளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறதா கம்ப்ளைன்ட் வந்திருக்கு என்று சொல்லுகிறார்.

அப்படியெல்லாம் நாங்க யாரையும் அடைச்சு வைக்கல சார் என்று அருணாச்சலம் சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி நீங்க போங்க நான் ஏசி கிட்ட பேசுகிறேன் என்று சொல்ல நீங்க ஏசி கிட்ட தான் பேசுங்க டிசி கிட்ட நான் பேசுங்க ஆனா எனக்கு வந்த கம்ப்ளைன்ட் நான் விசாரிச்சு அவங்களுக்கு பதில் சொல்லணும் என்று சொல்லுகிறார். உடனே சிங்காரத்தை பார்த்து நீங்க யார் என்று கேட்க நான் தான் நந்தினியோட அப்பா இங்க வந்து பாத்தா என் பொண்ண காணும்னு சொல்றாங்க என்று சொல்ல உடன் இவங்க பேசுறது எல்லாம் பார்த்தா வேலைக்காகாது உள்ள போய் தேடுங்க என்று அனுப்பி வைக்கின்றது.

அருணாச்சலம் போலீசை உட்கார வைத்து பேச நந்தினி காணாமல் போய் ரெண்டு நாள் ஆச்சு நாங்களே தேடி கண்டுபிடித்து நான் தான் இருந்தோம் இல்லன்னா கண்டிப்பா கம்ப்ளைன்ட் கொடுத்திருப்போம் என்று சொல்ல, அந்த பொண்ணோட அப்பாவ கூப்பிடுங்க என்று சொல்ல அருணாச்சலம் சிங்காரத்தை கூப்பிடுகிறார். போலீஸ அவரிடம் விசாரிக்க என்ன பேரு என்ன ஊரு என்றெல்லாம் கேட்கின்றனர். இவங்க உங்க பொண்ணு காணாம போனதை சொன்னாங்களா என்று சொல்ல கொஞ்ச நேரம் யோசித்த சிங்காரம் சொல்லவில்லை நான் வேற ஒருத்தர் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன் என்று சொன்னவுடன் ஆக பொண்ணோட அப்பாவுக்கே தெரியாம இருக்கணும்னு பிளான் பண்ணி இருக்கீங்க என்று போலீஸ் சொல்லுகின்றன இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவின் போலீஸ் சிங்காரத்திடம் புகார் கொடுக்க சொல்ல அது என்னால முடியாது சார் என்று சொல்லிவிடுகிறார் உடனே நான் கொடுக்கிறேன் என்று சூர்யா வந்து நிற்கிறார்.

உடனே மினிஸ்டர் கம்ப்ளைன்ட் கொலை கேஸா மாத்திடுங்க என்று போலீஸிடம் சொல்லுகிறார். நந்தினிய காணோம்னு நெனச்சு ஸ்வீட் எடுத்து கொடுத்தாங்களே அது ஒன்னு போதாத டாடி என்று சுந்தரவள்ளியை பார்த்து சூர்யா கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichi serial promo update

moondru mudichi serial promo update