நந்தினியை அரெஸ்ட் பண்ணும் போலீஸ், தடுத்து நிறுத்திய அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அசோகன் மாதவியை தேடி வருகிறார். அசோகன் குடித்து வந்திருப்பதை பார்த்து மாதவி அவனை குடிக்க வைக்க சொன்னா நீங்க குடிச்சுக்கிட்டு இருக்கீங்களா என்று கேட்கிறார். நீ அவன குடிக்க மட்டும் தானே வைக்க சொன்னேன் ஆனா நான் அவன் ரூம் புல்லா அடுக்கி வைக்குற அளவுக்கு சரக்கு வாங்கிட்டேன் என்று சொன்ன மாதவி சந்தோஷப்படுகிறார் பிறகு அசோகன் உலர அவரை கட்டிலில் தள்ளிவிட்டு மாதவி சந்தோஷப்படுகிறார்.
நந்தினி வீடு பெருக்கிக் கொண்டிருக்க மாதவி வீட்ல யாரும் இல்ல நீ கதவை திறந்து போட்டுட்டு எங்கேயும் போகாத என்று சொல்லிவிட்டு கிளம்ப நந்தினி கதவை சாத்திவிட்டு வந்து வீட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து காலிங் பெல் அடிக்க இருவர் நின்று கொண்டிருக்கின்றனர்.
ஏசி சர்வீஸ் பண்ணனும் என்று சொல்லுகின்றனர்.வீட்ல யாரும் இல்ல என்று சொல்ல, இது ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி பண்ற சர்வீஸ் தான் இன்னைக்கு தான் வர சொல்லி இருந்தாங்க சூர்யா சார் தான் வர சொன்னாரு என்று சொல்ல, நந்தினி சரி உள்ளே வாங்க என்று சொல்லுகிறார். பிறகு அவர்கள் ஏணியை கேட்டுவிட்டு பெட்ரூமுக்குள் சென்று விடுகின்றனர். அவர்கள் ஏசியை கழட்டுவது போல் வேலை செய்ய அவர்களுக்கு நந்தினி தண்ணீர் கொடுக்கிறார். நந்தினி சென்றதை கவனித்த பிறகு வெளியில் ஆள் வராங்களா பாரு என்று சொல்லிவிட்டு பீரோவை திறக்கிறார். நந்தினி காய்கறிகளை வெட்டிக் கொண்டிருக்க இங்கு வந்த திருடர்கள் நகையையும் பணத்தையும் பையில் எடுத்து போட்டுக் கொள்கின்றனர். பிறகு நந்தினி இடம் கேஷுவலாக வந்து இந்த இடம் முடிஞ்சதுமா அடுத்து எந்த ரூம் என்று கேட்டு இன்னொரு ரூமுக்குள் சென்று விடுகின்றனர். ஒருவர் நந்தினி பார்க்கிறாரா என்று பார்க்கிறார். பிறகு இருவரும் மேலே செல்கின்றனர்.
உடனே நந்தினி குரல் கொடுத்து விட்டு மேலே வர அவர்கள் உடனே சுதாரித்துக் கொண்டு ஏசியை கிளீன் பண்ணுவது போல நடிக்கின்றனர். ரொம்ப நேரமா வேலை பாக்குறீங்க டீ காபி ஏதாவது போடவா என்று கேட்ட அவர்கள் கீழே வந்து குடிக்கிறோம் என்று சொல்லிவிடுகின்றனர். நந்தினி சென்ற பிறகு மீண்டும் திருடா ஆரம்பிக்கின்றனர். அந்த ரூமில் இருக்கும் நகை பணம் என அனைத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். மற்றொரு ரூமுக்குச் சென்ற இருவரும் அங்கிருக்கும் பொருட்களையும் எடுத்துவிட்டு மொத்தத்தையும் எடுத்தாச்சு என்று சொல்லி வெளியே வருகின்றனர்.
நாங்க கிளம்புறோம் என்று சொல்ல டீ குடிச்சிட்டு போங்க இருங்க என்று சொல்லி நிற்க வைத்து டீ கொடுக்கிறார். டீயை குடித்துவிட்டு நல்லா இருக்கிறது நாங்க கிளம்புரோமா என்று சொல்லிவிட்டு அவர்கள் வெளியே செல்ல நந்தினி மீண்டும் கதவை சாத்தி விடுகிறார். பிறகு மாதவி சுரேகா சுந்தரவல்லி அசோகன் என நான் வரும் காரில் வந்து இறங்குகின்றன. ரூமுக்கு வந்த அசோகன் மாதவியிடம் கிரீன் டீல பச்சை மிளகாய் கலக்க சொன்ன ஐடியா உன்னோடது தானே என்று கேட்க அதுல என்ன சந்தேகம் என்று கேட்கிறார். உடனே மாதவி எனக்கு கசகசன்னு இருக்கு நான் டிரஸ் சேஞ்ச் பண்ணனும் புடவை எடுங்க என்று சொல்ல அசோகன் பீரோவை திறக்க அங்கு கலைந்திருப்பதை பார்த்து மாதவி அதிர்ச்சியாகி எல்லாத்தையும் ஓபன் பண்ணி பார்க்க எதிலும் நகை இல்லாததால் அதிர்ச்சி அடைகிறார். உடனே அசோகன் பதட்டப்படாத தேடுமா வீட்டுக்குள்ள இருந்தது எங்க போயிடும் என்று சொல்லுகிறார். உடனே அசோகனிடம் நீங்கதான் எடுத்தீங்களா உண்மைய சொல்லுங்க என்று சொல்ல உன் மேல சத்தியமா நான் எடுக்கணும் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி மாதவி சுரேகாவை கூப்பிட்டு மேலே வந்து ரூமில் வைத்த பணம் நகையை காணோம் என்று சொல்ல எங்கள் ரூமில் வைத்ததையும் காணும் என்று சொன்னவுடன் சுந்தரவல்லி நந்தினியை பார்க்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதம்மா என்ன நம்புங்கம்மா தயவு செஞ்சு என்று நந்தினி அழுது கொண்டே சொல்லுகிறார். செய்றதெல்லாம் செஞ்சிட்டு நீலி கண்ணீர் வடிக்கிறியா என்று சுந்தரவல்லி கேட்கிறார்.
பிறகு போலீஸ் அருணாச்சலத்திடம் உங்க வீட்ல வேலை செய்ற பொண்ணு மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க அதனால அவங்கள அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போறோம் என்று சொல்ல அருணாச்சலம் இவ எங்களோட மருமக என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.