தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ,சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா மண்டபத்திற்குள் காருக்குள் வர பட்டாசு வெடித்து உள்ளே வரவேற்கின்றனர். ஆனால் சூர்யா குட்டி டவுசர் சட்டையுடன் கையில் சரக்குடன் வந்து குத்தாட்டம் போடுகிறார். இதைப் பார்த்து சுந்தரவல்லி கடுப்பாகிறார். அருணாச்சலம் சூர்யாவை தடுத்து நிறுத்தி என்னடா ஆச்சி கோட் போட்டுட்டு வரல என்று கேட்கிறார். ரூம்ல கோட் இல்ல அதனால போட்டுட்டு வரல என்று சொல்லுகிறார்.

மீண்டும் டான்ஸ் ஆடிக்கொண்டே மண்டபத்திற்குள் வந்த சூர்யாவை பார்த்து மினிஸ்டர் என்ன மாப்பிள கோட் போட்டுட்டு வரல என்று கேட்கிறார். அதற்கு சூர்யா ரூம்ல கோட் இல்ல என்று சொல்ல,என் பொண்ணு உங்களுக்காக ஆசை ஆசையா பார்த்து டிசைன் பண்ணது என்று சூர்யாவிடம் மினிஸ்டர் சொல்லுகிறார் அதற்கு சூர்யா கோட் இருந்தால் நான் போட்டுகிட்டு வந்து இருப்பேன் ஆனால் கோட் இல்ல என்று சொல்கிறார். உடனே மாதவி அவரின் கணவரை தள்ளிவிட்டு நான் சொன்னதை போய் சொல்லு என்று சொல்லுகிறார் அதற்கு மாதவியின் கணவர் நாங்க என்ன கோட்ட லாண்டரிக்கு போட்டுட்டா இல்லன்னு சொல்றோம் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி மாப்பிள்ளை என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கண்டிக்கிறார்.

உடனே மாதவி என்னமா பேசுறீங்க, மினிஸ்டரிடம் உங்க பொண்ணுக்கு என்ன நகை வேணும் என்ன புடவை எடுக்கணும் என்று எல்லாத்தையும் நாங்க உங்க பொண்ணு கிட்ட கேட்டு கேட்டு தானே வாங்கணும் ஆனா உங்க பொண்ணு என் தம்பி கிட்ட எந்த டிரஸ் வேணும்னு கேட்டாளா என்று கேட்கிறார் மாதவி. என் தம்பி ஒன்னு உங்க வீட்ல வந்து வாழ போறதில்ல உங்களோட பொண்ணுதான் எங்க வீட்ல வந்து வாழ போறா தெரிஞ்சு நடந்துக்கோங்க நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் அப்போதுல இருந்து நக்கலா பேசுறீங்க என்று மினிஸ்டருடன் வம்பு இழுக்கிறார் மாதவி.

சுந்தரவல்லி மாதவியை அடக்கி மினிஸ்டரிடம் மன்னிப்பு கேட்க அதற்கு மினிஸ்டர் பக்கத்தில் இருந்தவர் இதெல்லாம் ஒன்னுமே இல்ல நாங்க மாநாடு பேசும்போது கழுவி தலையில ஊத்துவாங்க அதுவே எங்கள் தலைவர் காதலை விழாது இதெல்லாம் ஒண்ணுமே இல்ல என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து லாண்டரி போட்ட நபர் வர இங்கு யார் அசோகன் என்று கேட்கிறார் அதற்கு திருத்திருவென மாதவியின் கணவர் முழிக்க உடனே என்னோட கோட்டுக்கு பதிலா நான் சூர்யாவோட கோட்ட லாண்டரிக்கு போட்டுட்டேன் என்று மாற்றி சொல்லி சமாளிக்கிறார். உடனே சுந்தரவல்லி மாதவியை இப்ப என்ன பண்ணப் போற என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.

மறுபக்கம் சுந்தரவல்லி அனைவரையும் சாப்பிட சொல்ல ஊர்காரர்கள் அனைவரும் சாப்பிட கிளம்புகின்றனர் அருணாச்சலம் நந்தினி அனுப்பி இவர்களுக்கு சாப்பாடு பரிமாறுமா என்று அனுப்பி வைக்கிறார். அனைவரையும் உட்கார வைத்து நந்தினி சாப்பாடு பரிமாற சுதாகருக்கு சாப்பாடு வைக்க அவர் நந்தினியை அவமானப்படுத்துகிறார். நான் லட்சக்கணக்குல மொழி வைக்க வந்திருக்கேன் நீ வைக்கிற சாப்பாட்டை சாப்பிடுவானா இலையில் இருந்து எடு என்று அசிங்கப்படுத்துகிறார் பக்கத்தில் இருக்கும் நபர் எவ்வளவு சொல்லியும் அவர் நந்தினியை திட்டுகிறார். உடனே நந்தினி இலையில் இருப்பதை எடுத்துவிட்டு சரசிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சோகமாக கிளம்பி விடுகிறார்.

சாப்பிடும் இடத்திற்கு வந்த சுந்தரவல்லி அனைவரையும் கூச்சப்படாமல் நல்லா சாப்பிடுங்க என்று சொல்லிக் கொண்டிருக்க சுதாகர் நிலையை பார்த்து என்ன சாப்பிடுறீங்க நல்லா சாப்பிடுங்க கூச்சப்படாதீங்க என்று சொல்ல இந்த வேலைக்காரவங்க மூஞ்செல்லாம் பார்த்தா எங்க சாப்பிட முடியும் என்று பேச அருணாச்சலத்தின் முகம் மாறுகிறது அவர் கிளம்பி விடுகிறார். மறுபக்கம் சூர்யாவும் சூர்யாவும் நண்பரும் சரக்கடிக்கிறோம் ஜாலியா என்ஜாய் பண்றோம் என்று டான்ஸ் ஆடிக் கொண்டே வர அங்கு இருக்கும் பவுன்சர் சூர்யாவின் பின்னாலேயே வருகின்றனர்.

இதனை கவனித்த சூர்யா முன்னாள் போனால் முன்னாலையும் பின்னால் வந்தால் பின்னாலயும் பவுன்சர் வருகின்றனர். யார்ரா நீங்க எல்லாம் என்று கேட்க நாங்கெல்லாம் பவுன்சர் சார் என்று நந்தினியின் மாமா சொல்லுகிறார். இந்த குரலை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என்று திரும்ப ஏ குடுகுடுப்பு நீ எங்க இங்க என்று கேட்கிறார். நாங்க பவுன்சர் சார் உங்க பாதுகாப்புக்காக வந்திருக்கோம் என்று சொல்ல வா சரக்கு அடிக்கலாம் என்று கூப்பிடுகிறார். டியூட்டில இருக்கும்போது சரக்கடிக்க மாட்டேன் சார் என்று சொல்ல அப்ப சட்டையை கழட்டி வச்சிட்டு வா என்று சொல்ல நந்தினியின் மாமா வேலை விட்டு தூக்கிடுவாங்க சார் என்று சொல்ல நான் வேலை கொடுக்கிறேன் வா என்று சரக்கடிக்க கூப்பிடுகிறார்.

அருணாச்சலம் சிங்காரத்தை சாப்பிட சொல்லுகிறார். வேலைய முடிச்சுட்டு சாப்பிடுகிறேன் என்று சொல்லியும் சாப்பிட்டு வேலையை பாரு என்று அருணாச்சலம் நந்தினியை கூப்பிட்டு சாப்பிட கூப்பிட்டு போம்மா என்று சொல்லுகிறார் நந்தினியும் வாப்பா என்று கூப்பிட அப்புறம் சாப்பிட்டுக்கலாமா எல்லாரும் சாப்பிடட்டும் என்று சொல்ல நான் பாத்துக்குறேன் நீ வாப்பா சாப்பிடு என்று நந்தினி கூட்டி சென்று உட்கார வைக்கிறார்.

சிங்காரம் பந்தியில் உட்கார பக்கத்தில் இருப்பவர்கள் தள்ளி உட்காருகின்றனர். அவர்களிடம் எங்கய்யாவுக்கு கல்யாணம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க அவர்கள் முகம் சுளிக்கின்றனர். இதனை சுந்தரவல்லி பார்த்து விடுகிறார். அங்கு சாப்பிட்டிருந்தவர்கள் எழுந்து செல்ல அவர்களை தடுத்து நிறுத்தி சுந்தரவல்லி சாப்பிட சொல்லியும் வேண்டாம் நாங்க அப்புறமா சாப்பிட்டுக்குறோம் என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.

இதனால் கடுப்பான சுந்தரவல்லி சிங்காரம் மற்றும் நந்தினியை இவங்கெல்லாம் யாருன்னு தெரியுமா இவன் எவ்ளோ பெரிய வி ஐ பி ன்னு தெரியுமா இவங்க பக்கத்துல ஒக்காந்து சாப்பிட்டாதான் உங்களுக்கு சாப்பாடு வயித்துல இறங்குமா என்றெல்லாம் அசிங்கப்படுத்துகிறார். சோத்துக்கே வக்கில்லாத உங்கள எல்லாம் இங்க கூப்பிட்டது அவரோட தப்பு என்று திட்டி அவர்களை அனுப்பி வைக்கிறார். இதனைப் பார்த்து அருணாச்சலம் சாப்பிட உட்கார்ந்து அவங்கள இப்படி அனுப்புறது பாவம் என சொல்ல எனக்கு அந்த பாவம் புண்ணியம் எல்லாம் தெரியாது எனக்கு தேவ ஸ்டேட்டஸ் எனக்கு ஸ்டேட்டஸ் தான் முக்கியம் என்று அழுத்தமாக சொல்லுகிறார். அதற்கு அருணாச்சலம் நம்ப எப்பவுமே இது மாதிரி இருக்க மாட்டோம் நம்ம நிலைமையும் அவங்கள மாதிரி ஆகலாம் எப்பயும் எல்லாமே ஒரே மாதிரியே இருக்காது என்று சுந்தரவல்லி இடம் சொல்லிவிட்டு அருணாச்சலம் கிளம்புகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் ஆட்டம் பாட்டத்துடன் ரிசப்ஷன் நடந்து கொண்டிருக்க, சிங்காரம் என்ன இருந்து என்ன செய்ய, சம்பந்தம் கலக்காமல் கல்யாணம் நடக்குதே என்று சொல்லுகிறார்.

உடனே ஒரு திட்டத்தை போட்ட மாதவி இதைப் பற்றி தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும் பொண்ணோட அப்பா கிட்ட சொல்லுங்க என சிங்காரத்திடம் சொல்ல, அவர் மினிஸ்டரின் கையைப் பிடிக்க சிங்காரத்தை அறைந்து கீழே தள்ளி விடுகிறார்.

கண் கலங்கிய சிங்காரத்திடம் நாளைக்கு சூர்யா சார் தாலி கட்டி முடிச்சதும் இங்கிருந்து கிளம்பிடலாம்பா சாப்பிட கூட வேணாம் என்று அழுது கொண்டே சிங்காரத்திற்கு ஆறுதல் சொல்லுகிறார் நந்தினி. என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.