லால் சலாம் திரைப்படத்தின் மொய்தின் பாய் கதாபாத்திரம் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் “லால் சலாம்” திரைப்படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் கபில் தேவ் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்னும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக படகுழு சில மாதங்களுக்கு முன்பு போஸ்டருடன் அறிவித்திருந்தது. அதன் பிறகு மும்பை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இப்படத்தில் மொய்தின் பாய் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் முழுமையாக நிறைவு செய்திருப்பதாக படக்குழு புகைப்படத்துடன் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக இயக்குனரும், ரஜினியின் மகளும் ஆன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் “உங்களுடன் பணியாற்றியதும் உங்களை வைத்து திரைப்படம் இயக்கியதும் அற்புதமான ஒன்று அப்பா..” என்று குறிப்பிட்டு நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.