சார்பட்டா பரம்பரை குறித்து மோகன்ஜி பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mohan G Review on Sarpatta Parambarai : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பா ரஞ்சித். மெட்ராஸ் படத்தின் மூலம் இயக்குனரான இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி என இரண்டு படங்களை இயக்கினார்.

645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு : ஸ்மிருதி இரானி தகவல்..

இவற்றைத் தொடர்ந்து தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த 22ஆம் தேதி அமேசன் பிரைம் விடியோ வில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ரஞ்சித் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

சார்பட்டா பரம்பரை குறித்து மோகன்ஜி என்ன சொல்கிறார் பாருங்க - தீயாக பரவும் ட்வீட் ‌

தற்போது இந்த படம் பற்றி கவலை பட இயக்குனர் மோகன் கருத்து தெரிவித்திருப்பது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனபோது அது குறித்து கேட்டதற்கு மோகன்ஜி ட்ரெய்லரில் படக்குழுவின் உழைப்பு தெளிவாக தெரிகிறது. படம் நன்றாக இருந்தால் நிச்சயம் கொண்டாடுவேன் என கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மோகன்ஜி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் நடிப்பு சூப்பர். நான் கடவுள் படத்திற்குப் பிறகு மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

ரஞ்சித் சாரின் உழைப்பு படத்தில் தெளிவாக தெரிகிறது. கலை, இயக்கம், ஒளிப்பதிவு ஆகியவை உச்சம் என தெரிவித்துள்ளார்.

Ajith-திற்கு இதை சமர்ப்பிக்கிறேன் – Sarpatta Parambarai நடிகரின் நெகிழ்ச்சி பதிவு!