புதுடெல்லி : இந்தியாவின் வேலைவாய்ப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி , அஜிம் பல்கலையின் வேலைவாய்ப்பு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 82% சதவீதம் ஆண்களும், 92% சதவீதம் பெண்களும் மாதத்திற்கு 10,000 சம்பளத்திற்கு குறைவாகவே வருமானம் பெறுகிறார்கள்.

இதற்கு கருத்து தெரிவித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமரின் திட்டங்கள் இந்தியாவின் வேலைவாய்ப்பை கொன்று வருகிறது. திறமையுள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறார்கள் ” என பதிவிட்டுள்ளார்