MK Stalin Speech
MK Stalin Speech

MK Stalin Speech – குடியாத்தம்: திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சி, கொலைகார ஆட்சி என்று குற்றஞ்சாட்டி பேசியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கிராமங்கள் அனைத்தும் கோவில் என்றால் நான் பக்தன், நான் ஒரு பக்தனாக இங்கு வந்திருக்கிறேன்.

என்னுடைய தொகுதி கொளத்தூருக்கு வாரத்துக்கு ஒருமுறை சென்று மக்களை சந்திப்பேன். ஆனால் இந்த குடியாத்தம் தொகுதி அதிமுகவின் பங்காளி சண்டையால் எம்எல்ஏ இல்லாத அனாதை தொகுதியாக உள்ளது.

அதிமுக எம்எல்ஏ இந்த தொகுதியை சரிவர கவனிப்பதில்லை இவ்வாறு அதிமுகவை சாடினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், வருகிற “ஏப்ரல், மே மாதத்துக்குள் எம்பி தேர்தல் வர உள்ளது. மேலும் அதனுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது.

இதனிடையே சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது. அப்போது கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்திவிட்டால் திமுக வெற்றி பெற்றுவிடுமோ என்ற அச்சத்தினால், தேர்தல் தள்ளிப்போடப்பட்டே வருகிறது.தேர்தலில் போட்டியிட்டு திமுக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

மேலும் அதிமுக ஆட்சி குறித்து பேசுகையில், ‘அதிமுக ஆட்சி லஞ்ச ஆட்சி மட்டுமல்ல, கொள்ளையடிக்கும் ஆட்சி மட்டுமல்ல, கொலைகார ஆட்சியாகவும் நடக்கிறது’.

எனவே வரப்போகும் தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here