Mithali Raj Controversy
Mithali Raj Controversy

Mithali Raj Controversy – சமீபத்தில் நடந்த பெண்கள் டி-20 உலக கோப்பை தொடரில் முன்னாள் பெண்கள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கிரிக்கெட் நிர்வாகத்திடம்,

தன்னை பலமுறை பயிற்சியாளர் ரமேஷ் பவாரால் அவமதித்து உதாசீனம் செய்யப்பட்டதாகவும், இதனால் மனம் உடைந்து கண்ணீர் சிந்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தன்னை வேண்டுமென்றே நீக்கியதாகவும் கூறினார்.

இதனால் கிரிக்கெட் நிர்வாக குழு தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, மற்றும் பொது மேலாளர் சபா கரிம் ஆகியோரை சந்தித்து நேற்று பயிற்சியாளர் ரமேஷ் பாவர் விளக்கம் அளித்தார்.

அப்போது தொழில் முறை ரீதியாக எங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

மிதாலிராஜ் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து தள்ளியே இருந்ததால் அவரை கையாளுவது கடினமாக இருந்தது என்று கூறினார்.

சந்திப்பை பற்றி நிர்வாக குழு கூறியது :

ஆஸ், அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியை மர்ரமின்றி அப்படியே இறக்க வேண்டும் என்று முடிவு மேற்கொண்டோம்.

மேலும், அதிரடியாக ஆடுவதில் மிதாலியின் “ஸ்டிரைக்ரேட்” மோசகமா இருந்தது. இதன் காரணமாக அவரை அரையிறுதி ஆட்டத்தில் சேர்க்கவில்லை.

மற்றபடி, அவர் மீது எந்த வித பாகுபாடும் கட்டவில்லை என்று பவார் கூறி உள்ளார்.

மேலும், கிரிக்கெட் நிர்வாகம் மிதாலி ராஜை நீக்கும் படியான எந்த வற்புறுதலும் கொடுக்கவில்லை என்றும் கிரிக்கெட் நிர்வாக உறுபினர்கள் இருவர் இதில் தொடர்பில் உள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here