அது ஒருபோதும் நடக்காது: தளபதி விஜய் மீது, அமைச்சர் ரகுபதி பாய்ச்சல்
தளபதி விஜய் ‘தமிழக முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி, விக்கிரவாண்டியில் முதல் மாநாடும் சிறப்பாக நடத்திக் காட்டினார்.
மாநாட்டில் விஜய் முழங்கும்போது, ஆளும் திமுக கட்சி மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
தற்போது, தளபதி-69 படப்பிடிப்பு முடிந்ததும், சினிமா நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று, தனது முழு நேர அரசியலை முன்னெடுக்கிறார்.
அவ்வகையில், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
இவ்வாறான பரபரப்பு அரசியல் சூழ்நிலையில்.. புதுக்கோட்டையில், சட்டத்துறை இலாகாவை கொண்ட திமுக அமைச்சர் ரகுபதி இன்று கூறும்போது,
‘2024 ஆம் ஆண்டு வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி தோல்வி அடைந்தார்.
அதேபோல், அவரால் 2026 ஆம் ஆண்டிலும் வலுவான கூட்டணி அமைக்க முடியாது. அதே நேரத்தில், எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது.
யார் எந்த கூட்டணிக்கு சென்றாலும், எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் நண்பர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை.
மேலும், நடிகர் விஜய் எம்ஜிஆர் பாணியை பின்பற்றப் பார்க்கிறார். அது ஒருபோதும் நடக்காது. எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. திமுக மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டு பிசுபிசுத்து போகும், கண்டிப்பாக விஜய் தோல்வியை தான் சந்திப்பார்’ என்றார்.
இத்தகு கருத்துக்கு, விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் மீம்ஸ் கிரியேட் செய்து இணையத்தில் பதிலடி கொடுத்து நிகழ்வது வைரலாகி வருகிறது.