தஞ்சையில் நடந்த அ.தி.மு.க. பொது கூட்டத்தில் பேசிய அமைச்சர் துறைக்கண்ணு, தமிழகத்தில் ஊழலை கண்டுபிடித்ததே,  தி. மு. க தான். நிலக்கரி,உணவு என அனைத்திலும் ஊழல் செய்தது திமுக. “அதிமுக பற்றி யாராவது தரக்குறைவாக பேசினால் நாக்கை அறுத்து விடுவேன்”.

நாளை நாங்கள் ஆட்சியை பிடித்து விடுவோம் . தினகரன் குடுகுடுப்பைகாரர் போல , இந்த ஆட்சி இன்று போய்விடும் என கூறினார்.

இதற்கு பொன் . ராதாகிருஷ்ணன் , பொறுப்பு இன்றி பேசாமல் தமிழக அமைச்சர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து தங்கள் மாண்பை காப்பாற்ற வேண்டும் என கூறினார்.

மேலும்   ” நானும் தான் அதிமுக அரசை விமர்சனம் செய்கிறேன் என்னுடைய நாக்கை- ம் அறுப்பார்களா? ” என கூறினார்.