bigil

பிகில் படத்திற்கான சிறப்பு காட்சிக்கான பணத்தை ரசிகர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதில், அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க முடியாது. அதை மீறி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கனவே கூறிவிட்டார். ஆனாலும், சில திரையரங்குகள் பிகில் அதிகாலை காட்சிக்கான டிக்கெட்டுகளை விற்று வருகின்றனர். அந்த டிக்கெட்டுகளை ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ ‘ தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் விடுமுறையை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நல்லண்ணெத்தில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், இதை தவறாக பயன்படுத்தி திரையரங்க உரிமையாளர்கள் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்ததால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, தீபாவளி சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து அதற்கான பணத்தை திருப்பி கொடுக்க வலியுறுத்தியுள்ளோம். பிகில் மட்டுமல்ல.. எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை’ என அவர் கூறினார்.

இது விஜய் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.