Mersal producer tweet about Vijay fans | Thalapathy Vijay | Hema Rukmani | Atlee | Samantha | kajal Aggarwal | AR.Rahman | Nithya Menon

Mersal producer tweet about Vijay fans :

Mersal producer tweet about Vijay fans : திடீரென சில காரணங்களுக்காக விஜய் ரசிகர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்கியுள்ளனர். இதற்கு மெர்சல் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி கொடுத்த புகார்தான் காரணம் என சொல்லப்பட்டது.

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

மேலும் இணையதளங்களிலும் இவருடைய ரசிகர் படையை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் திடீரென சில காரணங்களுக்காக விஜய் ரசிகர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்கியுள்ளனர்.

இதற்கு மெர்சல் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி கொடுத்த புகார்தான் காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அதை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

மேலும் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இதற்காக தான் வருத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.