Master Trailer Release Date and Time

மாஸ்டர் படத்தின் டிரைலர் எப்போது எத்தனை மணிக்கு ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

Master Trailer Release Date and Time : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியான நிலையில் டிரைலர் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது சரியாக ஜனவரி 1-ஆம் தேதி இரவு 12 மணிக்கு மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெகு விரைவில் எதிர்பார்க்கலாம் என கூறுகின்றனர். மாஸ்டர் படத்தை எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் மற்றும் செவன் கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.