Master Release in USA

அமெரிக்காவின் மாஸ்டர் படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Master Release in USA : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் உலகம் முழுவதும் பொங்கலுக்கு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் 58 இடங்களில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக்காகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இதற்குள் இவ்வளவு டிக்கெட்டுகள் புக்கிங்காகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.