Master Release Date Announcement Video

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

Master Release Date Announcement Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீநாத், மகேந்திரன், வர்ஷா பொல்லம்மா என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழு தற்போது எதிர்பார்க்காத அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் எந்த தேதியில் வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு நாளை மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்காக பிரத்தியேகமாக வீடியோ ஒன்றை உருவாக்கி அதனை வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்யவே தளபதி விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்தார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.