YouTube video

Master Censor And Release Date Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிக்க வில்லியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். மேலும் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

Master Release Date

அதுமட்டுமல்லாமல் சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம், தீனா, மகேந்திரன், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்திரப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கூடுதல் தகவலாக இந்த படத்தை ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவாரத்திற்கு பொங்கல் விடுமுறை என்பதால் மாஸ்டர் படத்தின் வசூல் மாபெரும் வசூல் வேட்டையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.