Massive Update on Master Release

மாஸ்டர் திரைப்படம் முதல் இந்திய பேன் திரைப்படமாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Massive Update on Master Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த இரண்டு மொழிகளில் தொடர்ந்து இந்தியிலும் படத்தை டப் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது அதுவும் நிறைவேறியுள்ளது.

இந்தியில் இந்தப் படத்திற்கு Vijay The Master என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இந்த படம் ஹிந்தியில் சென்சார் செய்யப்படும்.

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாவதால் மாஸ்டர் திரைப்படம் கொரானாவுக்கு பிறகு வெளியாகும் முதல் பேன் இந்தியா திரைப்படமாக உருமாறி உள்ளது.