Mary Kom Won Gold
Mary Kom Won Gold

Mary Kom Won Gold

குத்துச்சண்டை போட்டியில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற 36 வயதான மேரி கோம் இந்தோனேசியா லபுயான் பஜோவில் நடைபெற்ற 23-வது பிரசிடென்ட் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டார்.

சிங்க குட்டி களமிறங்கிடுச்சு, உற்சாகத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார்.!

51 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஏப்ரில் பிரான்ங்ஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் மேரி கோம் 5-0 என எளிதாக வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

விரைவில் உலக சாம்பியன்ஸ் ஷிப் வருகிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் அவருக்கு இந்த வெற்றி ஊக்கத்தை கொடுத்துள்ளது.

பிகில் போஸ்டரைதான் அன்றே சொன்னாரா எஸ்.ஏ.சி? வைரலாகும் செய்தி!

பெண்களுக்கான 2019 உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்ஸ் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது.

இதில் சிறப்பாக விளையாடினால் 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.