மீனாவை நிற்க வைத்து அவமானப்படுத்தியுள்ளார் விஜயா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மொட்டை மாடியில் நின்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க ஹோட்டலில் இருந்து டிபன் வாங்கி வரும் முத்து சாப்பிட கூப்பிட மீனா எனக்கு வேண்டாம் என சொல்கிறார். 

ஒரு சின்ன குருவி பறக்க ஆசைப்பட்டு பறக்க கத்துக்கிட்டு பறக்க தொடங்கின வானமே இருண்டு போனா எப்படி ஆகிடும் எனக்கு இப்போ அப்படித்தான் இருக்கு என்று கண்கலங்குகிறார். வாழ்க்கையில பிரச்சனை வரத்தான் செய்யும் அதெல்லாம் சமாளிச்சு தான் வரணும் என்று முத்து ஆறுதல் சொல்கிறார். 

மீனா எனக்கு நீங்க முதல் முதலா வெச்சு கொடுத்த கதை ஆனால் அது என்னால பாத்துக்க முடியல என்று சொல்ல கார்ப்பரேஷன் காரன் தூக்கிட்டு போன அதுக்கு நீ என்ன பண்ணுவ என்று சொல்கிறார். மீனாவை கூப்பிட்டு சென்று உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி விடுகிறார். இதைவிட நான் எவ்வளவு பெரிய சோதனைகளை எல்லாம் கடந்து வந்திருக்கேன். அந்த மாதிரி நாமளும் வாழ்க்கையில ஜெயிப்போம் நீ கவலைப்படாத என்று சொல்கிறார். 

மறுநாள் காலையில் விஜயா ஏய் மீனா எவ்வளவு நேரமா காபிக்காக காத்திருக்கிறது என்று சத்தம் போட்டு கொண்டே கிச்சனுக்கு வர மீனா அங்கு இல்லை. ரோகினி மனோஜ் எங்களுக்கும் காபி வரல என்று சொல்ல மீனா மொட்டை மாடியில் இருந்து இறங்கி வர விஜயா எங்கடி போய் சுத்திட்டு வர என்று கேட்கிறார். இப்பதான் அத்தை மேல இருந்து தூங்கி எழுந்து வரேன் என்று சொல்ல நீ எப்பவும் ஹால்ல தானே படுத்து தூங்குவேன் உன்னை யாருடி மேல போய் படுத்து தூங்க சொன்னது என்ன கேள்வி கேட்கிறார். எங்க தூங்குன என்னத்த இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு என்று மீனா சொல்ல வேலை வெட்டி இல்லாம இருக்க வீட்டுல இருக்க வேலை எல்லாம் யார் பாப்பா? எல்லாரும் வேலைக்கு கிளம்ப வேணாவா என்று நிக்க வைத்து கேள்வி கேட்க மீனா ஏன் அத்தை ஒரு நாள் லேட்டானா வேற யாரும் காபி போடக் கூடாதா என்று கேட்க என்ன போய் காபி போட்டு உனக்கு கொண்டு வந்து கொடுக்க சொல்றியா என்று விஜயா வம்பு இழுக்கிறார். 

ரோகினி பியூட்டி பார்லர் போய் கை நிறைய சம்பாதிக்கிறா, ஸ்ருதியும் வேலைக்கு போறா இப்படி எல்லாரும் வேலைக்கு போகும்போது வீட்ல இருக்க வேலையை யார் பாப்பா வெட்டியா நீ தான இருக்க என்று பேச எனக்கு வேலை இல்லைன்னு குத்தி காட்றீங்களா என்று மீனா கேட்க ஆமா அதான உண்மை என்று விஜயா சொல்கிறார். முத்து ஏன் மீனாதான் எல்லாருக்கும் காபி போடணுமா? யாருக்கு என்ன தேவையோ அதை அவங்கவங்க செஞ்சுக்கோங்க என்று சொல்கிறார். ஏண்டி வேலை செய்ய முடியாதுன்னா செய்ய முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே நீ தானே எல்லா வேலையும் எடுத்து செஞ்ச, நீ போய் படுத்து தூங்கு நாங்களே போட்டுக்கறோம் வாக்கிங் போன அவர் வந்தா அவரையே போட்டு குடிக்க சென்று என்று சொல்ல மீனா நானே போய் போடுறேன் நீங்க சொன்ன மாதிரி எனக்கு வேலை இல்லாம வெட்டியா தானே இருக்கேன் என்று சொல்லி கிச்சனுக்கு செல்கிறார். 

அடுத்ததாக நண்பர்களை பார்க்க வந்த முத்து பூ கடை போன விஷயத்தை சொல்லி மீனாவுக்காக எதையாவது பண்ணிக் கொடுக்கணும் என்று யோசிக்க அப்போது நண்பர் ஒருவருக்கு வீட்டில் இருந்து போன் பண்ணி ஆன்லைனில் ஆர்டர் பண்ண விஷயத்தை சொல்ல முத்துவுக்குள் அதே மாதிரி பூவையும் டெலிவரி பண்ணலாம் என்று ஐடியா வர உடனே ஒரு வண்டியை வாங்கலாம் என்று யோசிக்கிறார். 

பிறகு முத்து நண்பர்களிடம் இருக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு 20000 ரூபாய்க்கு பணத்தை எடுத்துக்கொண்டு சோ ரூமுக்கு வந்து ஒரு வண்டியை பார்க்கிறார். என்ன கலர் வேண்டும் என்று கேட்க மீனாவுக்கு போன் போட்டு உன்னுடைய புடிச்ச கலர் என்ன என்று கேட்டு தெரிந்து கொள்கிறார். 

பிறகு வீட்டில் உள்ள எல்லோருக்கும் போன் போட்டு கீழே வர சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.