மாரி செல்வராஜ் வெளியிட்டு இருக்கும் நெகிழ்ச்சியான வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். வடிவேலு, கீர்த்தி சுரேஷ் பஹத் பாசில், என பலர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி டிரெண்ட்டிங்கில் சாதனை படைத்து வருகிறது. இதில் வடிவேலுவின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது மட்டுமின்றி அனைவரிடமும் பாராட்டுகளை குவித்து இருந்தது.

இந்த நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ், வடிவேலு பாடும் பாடல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இந்த நொடி தான். நன்றி வடிவேலு சார் என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.