நடிகர் மன்சூர் அலிகான் விஜயின் ‘நா ரெடிதான்’ பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். ஏராளமான திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “நா ரெடிதான்” பாடல் சமீபத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் தொடர்ந்து இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வரும் நிலையில் அப்பாடலுக்கு நடிகர் மன்சூர் அலிகான் காருக்குள் அமர்ந்து கொண்டு வைபாகி டான்ஸ் ஆடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/imMansorAlikhan/status/1674053142982410241?t=cvqxL_OxgJ1ToHnzQvt5uA&s=19