Mankatha 2

Mankatha 2 Music : மங்காத்தா 2 உருவானால் அதற்கு யார் இசையமைப்பாளர் என்ற தகவலை வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் தல அஜித்தை வைத்து இயக்கி இருந்த மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இதனால் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் வெங்கட் பிரபுவும் அஜித்துடன் நிச்சயம் ஒரு படம் இருக்கிறது என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள ஆர்.கே நகர் படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்திருந்த பேட்டி ஒன்றில் மங்காத்தா 2 உருவானால் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

விஜய்க்கு நன்றி உள்ள நாயா இருப்பேன் – தளபதி 63-ல் நடித்த பிக் பாஸ் பிரபலம் ஓபன் டாக்.!

அதாவது என்னுடைய படத்தில் எப்போதும் வெங்கட் பிரபு பாலிடிக்ஸ் இது போன்று எதாவது வித்தியாசமான வரி இடம் பெறும், அதே போல பிரேம் ஜி இசையமைக்கும் படங்களிலும் இருக்கும் என கூறியிருந்தார்.

அப்படியென்றால் பிரேம்ஜி மங்காத்தா 2 படத்திற்கு இசையமைத்தால் என்ன லைன் இடம் பெறும் என கேட்டதற்கு இசை சூதாடி என இடம்பெறும் என கூறியுள்ளார்.

அதற்காக பிரேம் ஜி தான் மங்காத்தா 2 படத்திற்கு இசையமைப்பாளரா என கேட்காதீர்கள். நிச்சயமாக அவர் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.