Thalapathy 63 Celebrity

Thalapathy 63 Celebrity : விஜய்க்கு என்றென்றைக்கும் நன்றியுள்ள நாயாக இருப்பேன் என காமெடி நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான பாலாஜி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63.

அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பரியேறும் பெருமாள் கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி செராப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து பிக் பாஸ் தாடி பாலாஜியும் நடித்துள்ளாராம். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

நான் தளபதி விஜயுடன் சேர்ந்து இறுதியாக சச்சின் படத்தில் நடித்திருந்தேன். விஜய் எனக்கு நிறைய உதவிகள் செய்திருந்தார்.

தற்போது தளபதி 63-ல் நடித்திருப்பது மகிழ்ச்சி. இன்னும் டப்பிங் கொடுக்க வேண்டிய வேலை தான் உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் நான் என்றென்றைக்கும் விஜய்க்கு நன்றியுள்ள நாயாக இருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.