Manju Warrier Next Tamil Movie
மஞ்சு வாரியர் மீண்டும் தமிழ் படத்தில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் முதல் முறையாக அசுரன் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

அசுரனுக்கு முன்பாகவே பல படங்களில் நடிக்குமாறு அவரை அணுகியும் அவர் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. அசுரன் படத்திற்க்கு தான் அவர் ஓகே சொல்லி இருந்தார்.

தற்போது அசுரனை தொடர்ந்து இன்னொரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மஞ்சு வாரியர். ஆம், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.