மீண்டும் படத்தில் இருந்து ” மஞ்சள் கயிறு ” என்ற வீடியோ பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

Manjal Kayiru Video Song : தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சிட்டிசன். இந்தப் படத்தை இயக்கிய சரவண சுப்பையா பல வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது கதிரவன் என்ற அறிமுக நடிகர் நடிப்பில் உருவாகியுள்ள மீண்டும் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனகா நாயகியாக நடிக்க ரவி மரியா உட்பட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் டிசம்பர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து மஞ்சள் கயிறு என்ற வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.