
விஜய்யின் கடைசிப் படத்தில் நடித்த மமிதா பைஜூ; செம குஷியான தகவல்..
‘ப்ரேமலு’ படம் மூலம் பிரபலமான மமிதா, விஜய்-69 படத்தில் நடித்தபோது நிகழ்ந்த மகிழ்வான தருணங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்துப் பார்ப்போம்..
விஜய் தற்போது ‘தளபதி-69’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். எச்.வினோத் இயக்க, அனிருத் இசையக்கிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்யின் ‘தளபதி-69’ ஒரு ரீமேக் படம் என்ற தகவலும் பரவலாக இருந்து வருகின்றது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான், விஜய்க்காக மாற்றியமைக்கப்பட்டு உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில், இப்படத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்து வரும் மமிதா பைஜூ, விஜய்யுடன் இணைந்து நடிப்பதை பற்றி பேசியுள்ளார். ப்ரேமலு படத்தின் மூலம் புகழ்பெற்ற மமிதா பைஜூ தெரிவிக்கையில்,
‘தளபதியுடன் இணைந்து நடிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாக இருந்தது. இப்படத்தின் மூலம் அந்த கனவு நெனவாகி உள்ளது. இதை என்னுடைய மிகப்பெரிய சாதனையாக பார்க்கின்றேன்.
விஜய் சார் என்னை பார்த்தவுடன், “ஹை மா, எப்படி இருக்க..” என கேட்டார். அப்போது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிக இனிமையான மனிதர்’ என மனம் சிறகடிக்க பேசியுள்ளார்.
