மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வடிவேலு நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கடைசி திரைப்படமாகக வெளியாகி உள்ள திரைப்படம் மாமன்னன்.

படத்தின் கதைக்களம் :

சமூகநீதி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ஆதிக்க வர்க்கத்தை சார்ந்தவர் ஃபகத் பாஸில். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-வாக பட்டியலின சமூகத்தைச் சார்ந்த வடிவேலு இருந்து வருகிறார்.

வடிவேலின் மகனாக உதயநிதி ஸ்டாலினும், அவரது காதலியாக கீர்த்தி சுரேஷும் வருகின்றனர். உதயநிதிக்கு சொந்தமான இடத்தில் கீர்த்தி சுரேஷ் நடத்தி வரும் இலவச கல்வி மையத்தை ஃபஹத் ஃபாசில் அண்ணனாக வரும் சுனில் சேதப்படுத்துகிறார்.

இதற்காக பேச்சுவார்த்தை நடத்த வரும் இடத்தில் வடிவேலு சரிசமமாக நடத்தப்படாததை கண்டு அவரது மகன் உதயநிதி கொதித்தெழுகிறார். கோபத்தில் பகத் பாஹில் மீது கை வைக்க அவர் இந்த கட்சியை விட்டு விலகி வேறு கட்சியில் இணைகிறார். அதன் பிறகு நடைபெறும் தேர்தலில் பகத் பாஹில் ஒரு பக்கம் மறுபக்கம் வடிவேலு என எதிரெதிராக போட்டி போடுகின்றனர். இந்த தேர்தல் களத்தில் வெற்றி பெற்றது யார் என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தைப் பற்றிய அலசல் :

மாரி செல்வராஜ் வழக்கம்போல இந்த படத்திலும் ஜாதி ரீதியாக சமூகத்தில் நடக்கும் அநீதிகளை நெத்தி பொட்டில் அடித்தார் போல கதையை கொண்டு சென்று உள்ளார்.

வடிவேலு அனுபவம் வாய்ந்த நடிப்பை கொடுக்க உதயநிதி ஸ்டாலின் எதார்த்தமான நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் செய்துள்ளார். கீர்த்தி சுரேஷ் உதயநிதியின் காதலியாக அவ்வபோது வந்து போகிறார்.

ஏ ஆர் ரகுமான் அவர்களின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. ‌

மொத்தத்தில் மாமன்னன் மாஸ் காட்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.