
மாமன்னன் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரத்தியேகமான கதைகளை இயக்கி தனி இடம் பிடித்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து இவரது இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த ஜூன் 29ஆம் தேதி “மாமன்னன்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடை போட்டது.
வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் Netflix தளத்தில் ஜூலை 27 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நெட்ப்ளிக்ஸ் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
மாரி செல்வராஜ் தலித் மக்களை உயர்வாக காட்ட வேண்டும் என்பது போல இந்த படத்தை இயக்கிய நிலையில் சிலர் இந்த படத்தில் மேல் ஜாதி வெறியனாக காட்டப்பட்ட பகத் பாஹிலை கொண்டாடி சமூக வலைதளங்களில் ட்வீட் செய்து வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் மாரி செல்வராஜிற்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளன.
