படங்களை தேர்வு செய்வது குறித்து நடிகை மாளவிகா மோகனம் கூறியிருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக இடம் பிடித்தார்.

அதன் பிறகு தனுஷின் மாறன் திரைப்படம் மூலம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை மாளவிகா மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் படங்களை தேர்வு செய்வது குறித்து அளித்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், தான் இனிமேல் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறி இருக்கிறார். 500 கோடி வசூலிக்க கூடிய படமாக இருந்தாலும் அவரது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அதிலும் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் படம் ஓடி வசூலில் சாதனை படைத்தாலும் முக்கியத்துவம் இல்லாத கதாப்பாத்திரமாக இருந்தால் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று மாளவிகா மோகனன் அப்பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். அவரது இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.