
Watch Video : Makkal Maiam Polling Results About Tamil Nadu Election 2021
மக்கள் மையம் எனும் கிராமிய மக்கள் மற்றும் பயிற்சி மையம் சார்பில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் குறித்த மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், அதிமுக முன்னிலையில் இருப்பதாக கள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வரும் அதிமுக அரசின் சாதனை திட்டங்கள் குறித்தும் இந்த கருத்துக்கணிப்பில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதிலும், கூட்டுறவு கடன் தள்ளுபடி, குடிமராமத்து திட்டம், தொடர் மின்சாரம் வழங்கியது, பொங்கல் பரிசு, அம்மா மினி கிளினிக்குகள், ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது, காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்கும் திட்டம், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கிய திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அதிமுக அரசின் சிறந்த செயல்பாடுகள் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

- தமிழகத்திற்கு அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று 36 சதவீதம் பேரும், ஸ்டாலின் என்று 34 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
- கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதா? என்ற கேள்விக்கு ஆம் என்று 51 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
- தமிழகத்திற்கு இலவச திட்டங்கள் தேவையா என்று கேள்விக்கு தேவை என 29 சதவீத பேரும், தேவையில்லை என்று 61 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
- கடந்த அதிமுக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு நன்று என்று 43 சதவீதம் பேரும், மோசம் என்று 32 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
- இந்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் வாக்கு எந்த கட்சிக்கு என்பதில் அதிமுகவிற்கு 32 சதவீதம், திமுகவுக்கு 31 சதவீதம் என்று தெரிவித்துள்ளனர்.
- அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 112 முதல் 120 தொகுதிகள் வரையும், திமுக தலைமையிலான கூட்டணிக்கு 80 முத்த 90 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. சரியாக கணிக்க முடியாது என 24 தொகுதிகள் உள்ளன.