Major Changes in Kaakha Kaakha 2
Major Changes in Kaakha Kaakha 2

சூர்யா நடித்த படங்களில் பிஸியாக இருப்பதால் படத்தின் ஹீரோவை கௌதம் மேனன் மாற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Major Changes in Kaakha Kaakha 2 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காக்க காக்க.

சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 16 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாக உள்ளது.

ஆனால் சூர்யா அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களுடன் பிசியாக உள்ளார்.

சூர்யாவை உயரமாக காட்டியது இப்படி தான்? சீக்ரெட் உடைத்த பிரபல இயக்குனர்

இதன் காரணமாக கௌதம் மேனன் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஷாலை ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஷால் போலீஸ் கெட்டப்பில் கச்சிதமாக பொருந்துவார் என்பதால் கௌதம் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் தான் தெரியும்.

இருப்பினும் காக்க காக்க 2 படத்தில் சூர்யா இல்லை என வைரலாகும் தகவலால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.