இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர தோனி இன்று மாலை செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mahendra Singh Dhoni retire from cricket Dhoni pressmeet – ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி எப்போதோ விலகி விட்டார். அதன்பின் 2019ம் ஆண்டு உலக கோப்பையோடு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர் தனது ஓய்வை அறிவிக்கவில்லை.

தல 60 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான முதல் புகைப்படம் – மாஸ் லுக்கில் தல.!

ஆனால் தோனி ஓய்வு பெறக்கூடாது என அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர் சந்திப்பிற்கு தோனி ஏற்பாடு செய்துள்ளார். எனவே, அவர் கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக விலகுவதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தோனியின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.