
விடாமுயற்சி படத்தில் அஜித்தின் அறிமுகக் காட்சி எப்படி இருக்கும்? மகிழ்திருமேனி விளக்கம்.!
விடாமுயற்சி படத்தில் அஜித்தின் அறிமுகக் காட்சி குறித்து பேசி உள்ளார் மகிழ்திருமேனி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மகிழ்திருமேனி இயக்கத்திலும் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் மகிழ்திருமேனி அஜித்தின் அறிமுக காட்சி குறித்து பேசி உள்ளார். அதில் மாஸான அறிமுகக் காட்சி எல்லாம் அஜித்திற்கு கிடையாது. பஞ்ச் வசனங்களோ, மாஸ் ஆக்சன் காட்சிக்கான பில்டப்பும் இல்லை உங்களைப் போல் என்னை போல் ஒரு சாதாரண மனிதனாக இருந்த படத்தில் நடித்திருப்பார் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
