
தமிழகத்தின் புனித நதியான தாமிரபரணியில் மகாபுஷ்கர திருவிழா இன்று முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தாமிரபரணி சமவெளியில் தொடங்கும் பாபநாசம் முதல் கடலில் சேரும் குன்னக்காயல் வரையிலான 185 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 144 படித்துறைகளிலும் அதிகாலையிலேயே விழா தொடங்கும்.
குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருட்சக ராசிக்கு இடம்பெயர்வதை ஒட்டி இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இந்நாட்களில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரையுள்ள தாமிரபரணியின் படித்துறைகளில் நீராடுவோர்க்கு புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.