
பிரபலமான OTT தளத்தில் மாயோன் திரைப்படம் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் கிஷோர் இயக்கத்தில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் மாயோன்.

இளையராஜா இசையில் வெளிவந்த இத்திரைப்படம் ஆன்மீகத்தையும் அறிவியலையும் பேசும் படமாக இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாவது உறுதி எனவும் அறிவிக்கப்பட்டது.
இப்படியான நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று இப்படம் மிகவும் பிரபலமான OTT தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இன்று அல்லது நாளை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சிபி சத்தியராஜ், தான்யா ரவிச்சந்திரன், பக்ஸ், ராதா ரவி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
