Maaveeran Producer's emotional reply to Blue Sattai Maran tweet
Maaveeran Producer's emotional reply to Blue Sattai Maran tweet

நீங்க இப்படி பண்ணி இருக்க வேண்டாம் சார் எனும் சட்டை மாறன் பதிவுக்கு மாவீரன் தயாரிப்பாளர் பதில் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமா தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதிதி சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ளது. அருண் விஸ்வா இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில்… 12 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible வெளியாகிறது.

முதல் நாளுக்கான IMAX முன்பதிவு நிரம்பி வருகிறது.

‘குறுக்க இந்த கௌஷிக் வந்தா?’ மொமன்ட் என பதிவு செய்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவை பார்க்க தயாரிப்பாளர் வணக்கம் சார் நான் அருண் விஸ்வா, மாவீரன் படத்தோட தயாரிப்பாளர். எனக்கு என் படம் தான் சார் மிஷன் இம்பாசிபிள், அவதார், RRR எல்லாமே, உங்க வயசுக்கு நீங்க இப்படி ஒரு போட்டோவை போட்டு பதிவு செய்திருக்க வேண்டாம் சார் என ரிப்ளை கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் தயாரிப்பாளர் அருண் விஷ்வா எந்த தவறும் இல்லையே, ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் அவர்களுடைய படம் தான் உயர்ந்தது. ஒரு தாய் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது போல தான் ஒரு படத்தை ரிலீஸ் செய்து அதில் வெற்றி காண்பது என்பதும்.

ஒரு படத்தை உருவாக்குவதில் பல குடும்பங்களின் வாழ்க்கை உள்ளது. அப்படி இருக்கையில் ஒரு தமிழ் படத்தின் தயாரிப்பில் பல தமிழ் குடும்பங்களின் வாழ்க்கை இருக்கிறது. எனவே தமிழ் ரசிகர்கள் எப்போதும் தமிழ் படத்திற்கு தான் முன்னுரிமை கொடுத்தார்கள். மற்ற மொழி படங்களை வரவேற்பதில் தவறு கிடையாது ஆனால் அது நம் தமிழ் படங்களுக்கு அடுத்து தான் என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.