மாவீரன் திரைப்படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாவீரன். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

தமிழில் மாவீரன் என்ற தலைப்பில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகள் தீவிரமாக நடைபெற்று வரும் அதே சமயத்தில் தெலுங்கில் ‘மஹாவீருடு’ என்ற தலைப்பில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

ஏராளமான ரசிகர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தனுஷின் அடுத்த படம் இயக்குனர் சேகர் கமலா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இயக்குனர் சேகர் கமுலாவுடன் மாவீரன் படகுழுவினர் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.