மாவீரன் படத்தின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “மாவீரன்”. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது பிரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு மாவீரன் படத்தின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இன்று வெளியாக இருப்பதாக போஸ்டருடன் அறிவித்துள்ளது.

அதன்படி அதில், ‘மாவீரன்’ படத்தின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இன்று மாலை 6.00 வெளியாகும் என்றும் தெலுங்கின் ‘மாவீருடு’ 7.00 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.