மாவீரன் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா திரைப்பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கிறார். மேலும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக இருப்பதை படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

தற்போது படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதி கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் முதல் பாடலின் வரவேற்பை தொடர்ந்து படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலுக்காக அறிவிப்பு இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இந்த தகவலை ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.