மாவீரன் திரைப்படத்திற்கான பிரமோஷன்ஸ் பணிகள் ஸ்டார்ட் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா திரைப்பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கிறார். மேலும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக இருப்பதை படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

தற்போது படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதி கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் மாவீரன் திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளது. அதன்படி திரையரங்குகளில் இருக்கும் மாவீரன் திரைப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.