மாவீரன் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறும் நாள் குறித்த அறிவிப்பை ஸ்பெஷல் வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது.

சின்னத்திரை மூலம் தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் மாஸ் காட்டி வரும் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் ஷங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக மாவீரன் படத்தின் பிரீ ரிலீஸ் ஈவன்ட் தொடர்பான அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி மாவீரன் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி வரும் ஜூலை 2ஆம் தேதியான அன்று சென்னையில் உள்ள சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக ஸ்பெஷல் வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது. அதன் வீடியோவை ரசிகர்கள் உற்சாகத்துடன் வைரலாக்கி வருகின்றனர்.