மாவீரன் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஈவண்டுக்கு தொகுப்பாளராக வரும் பிக் பாஸ் ராஜூவின் வீடியோ வைரல்.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது. அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் ஜூலை 2 ஆம் தேதியான இன்று இப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஈவண்ட் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக படகுழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் தொகுப்பாளர்களுக்கான காமெடி வீடியோ ஒன்றை படகுழு வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த வீடியோவில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ மோகன் மற்றும் தொகுப்பாளினி பாவனா இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.