
வசூலை குவிக்கும் மாவீரன் படம் OTT ரிலீஸ் எப்போது என்பது குறித்து தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்டிஸ்ட் டூ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாவீரன்.

மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அதிதி சங்கர், மிஷ்கின், யோகி பாபு, சரிதா, சுனில் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களை இணைந்து நடித்தனர்.
இந்த படம் 80 கோடி ரூபாய் வசூலை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படம் OTT-ல் வெளியாவது எப்போது என தெரிய வந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டையாடுவது போல OTT-லும் மாவீரன் மாஸ் காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
